தங்கம் (gold) விலையானது வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையானது சமீப நாட்களாகவே தொடர்ந்து 1850 என்ற லெவலில் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பெரிய மாற்றம் இருக்காது?
அமெரிக்காவில் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், வழக்கத்தினை விட முதலீடுகள் சரியலாம். ஆக புதன் கிழமை வரையில் பெரியளவிலான தரவுகள் எதுவும் இல்லாத நிலையில், சந்தையில் பெரியளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1850 டாலர்கள் என்ற லெவலில் இருக்க வழிவகுக்கலாம்.
மெம்மோரியல் ஹாலிடே
இன்று அமெரிக்காவின் பங்கு சந்தைகள், பத்திர சந்தைகள் என அனைத்திற்கும் விடுமுறையாகும். இன்று அங்கு மெம்மோரியல் விடுமுறையாக அணுசரிக்க படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக சரிவு
மே 16 அன்று அவுன்ஸூக்கு 1786.60 டாலர்களை எட்டிய தங்கம், விலை மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டது. மார்ச் 2022க்கு பிறகு முதல் முறையாக தொடர்ச்சியாக 2வது மாதாந்திர வீழ்ச்சியினை கண்டுள்ளது. இதுவரையில் சுமார் 2.4% சரிவினைக் கண்டுள்ளது.
பெரியளவிலான சரிவு நிறுத்தம்
தொடர்ச்சியாக பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்த நிலையில், தங்கத்தில் அதிகளவிலான சரிவு தடுக்கப்பட்டது. அதே நேரம் உலகின் மிகப்பெரிய தங்கம் நுகர்வோரான சீனாவிலும் தேவை சரிவினைக் கண்டது. ஆக ஜூன் மாதத்திலாவது ஏதேனும் முன்னேற்றம் இருக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 8.80 டாலர்கள் அதிகரித்து, 1860.10 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும் இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. மீடியம் டெர்னில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகிறது. எனினும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.93% அதிகரித்து, 22.302 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.தற்போது 10 கிராமுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 51,065 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 436 ரூபாய் அதிகரித்து, 62,551 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது சென்னையில் கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 4795 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 38,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம்
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 5231 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 41,848 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,310 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது மாற்றமின்றி காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 67 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 670 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 67,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவே நீண்டகால நோக்கில் இன்று வெளியாகவிருக்கும் ஜிடிபி, டாலர் மதிப்பு, பத்திர சந்தை, தேவை உள்ளிட்ட பல காரணிகளும் தீர்மானிக்கலாம். ஆக சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!



Click it and Unblock the Notifications