தங்கம் விலையானது இரண்டாவது நாளாக இன்றும் சரிவினைக் கண்டுள்ளது. இது நகை வாங்குபவர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இது தங்க முதலீட்டாளர்களுக்கும், நகை பிரியர்களுக்கும் கிடைத்த நல்ல வாய்ப்பு என்றாலும், இன்னும் தங்கம் விலையானது குறையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.
டாலர் தடுமாற்றம்
தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவிழந்து காணப்படும் நிலையில், தங்கம் விலையானது சற்று அதிகரித்து வருகின்றது.
அதோடு அமெரிக்காவின் பண்ணை அல்லாத வேலை குறித்தான தரவானது வரவிருக்கும் நிலையில், அதனையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் உருமாறிய கொரோனாவின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டேட்டாவானது எப்படி வருமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது.
அதிக ஏற்றம் இருக்காது
வட்டி விகிதத்தினை அதிகரிக்க அமெரிக்கா எந்த கால அவகாசமும் கொடுக்கப்படாத நிலையில், எப்போது வட்டி விகிதம் அதிகரிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையில் இந்திய சந்தையினை பொறுத்த வரையில் இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது அதிக ஏற்றத்தினை தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புராபிட் புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள்
தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கம் விலையானது பட்டையை கிளப்பிக் கொண்டு வந்த நிலையில், நேற்று பலத்த சரிவினைக் கண்டது. இன்றும் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகின்றன. இது புராபிட் புக்கிங் செய்து வருவதால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதிகரித்து வரும் ரூபாய் மதிப்பும் இன்னும் சரிவுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை குறையலாம்
தங்கத்தின் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே இருப்பதால், மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைவது போலவே காணப்படுகின்றது. ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலேயே இருந்து வருகின்றது. நேற்றைய உச்சம் 1826.50 டாலர்களை தொட்ட நிலையில், முடிவில் 1812.20 டாலர்களாக முடிவுற்றது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு 7.05 டாலர்கள் அதிகரித்து, 1819.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலை, உச்ச விலை, என இரண்டையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையையும் உடைக்கவில்லை. தற்போது 0.88% அதிகரித்து, 24.218 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 136 ரூபாய் அதிகரித்து, 47,295 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என இரண்டையும் உடைத்துக் காட்டவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 441 ரூபாய் அதிகரித்து, 64,030 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று அதிகரித்து தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை குறைந்த விலை என இரண்டையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 22 ரூபாய் குறைந்து, 4,466 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 35,728 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 24 ரூபாய் குறைந்து, 4,782 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து, 38,976 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 68.40 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 68,400 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது.
இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. ஏனெனில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன. ஆக வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம். எனினும் ஆபரண தங்கம் வாங்க இது சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!



Click it and Unblock the Notifications