2021ல் பலத்த வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. 2022ல் தூள் கிளப்பலாம்.. நிபுணர்களின் செம கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா, ஓமிக்ரான் என வரிசைக் கட்டி தங்கத்திற்கு ஆதரவளிக்க பல காரணிகள் சந்தையில் வந்து கொண்டுள்ளன. எனினும் நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9,000 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

 

இதுவே நீண்டகால நோக்கில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சிறந்த இடமாகவே பார்க்கப்படுகிறது.

1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்! 1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்!

இதற்கிடையில் என்னதான் தங்கத்தின் விலையானது அதிகரித்தாலும், நாங்கள் வாங்குவதை வாங்கிக் கொண்டு தான் இருப்போம். என்று மக்களுக்கு தங்கத்தின் மீதுள்ள மோகமும், காதலும் குறையவில்லை. இதுவும் தங்கத்திற்கு ஆதரவாகவே இருந்து வருகின்றது.

முக்கிய முதலீடு

முக்கிய முதலீடு

அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாது, முதலீடுகளிலும் முக்கிய அம்சம் பொருந்திய முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் எந்த நெருக்கடியான காலகட்டத்திலும் போர்ட்போலியோ முதலீடுகளில் தங்கம் அவசியமான முதலீடாகவும் மாறியுள்ளது. இதற்கிடையில் தான் சர்வதேச சந்தை நிலவரம், தேவை, முக்கிய காரணிகளுக்கு ஏற்ப மாற்றம் காணும் எம்சிஎக்ஸ் தங்கத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.

3- 5% வீழ்ச்சி

3- 5% வீழ்ச்சி

கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலையானது மிகப்பெரிய அளவிலான ஏற்றத்தினை கண்டுள்ளது. எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு நடப்பு ஆண்டில் ஒரு சரிவினைக் கண்டுள்ளது. இது 25,000 ரூபாயில் இருந்து, 56,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளை போல் அல்லாமல் 3 - 5% சரிவினைக் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நோக்கில் இந்த ஆண்டில் கணிசமான இழப்பினையே கொடுத்துள்ளது.

தங்கம் மீதான ஆர்வம் சரிவு
 

தங்கம் மீதான ஆர்வம் சரிவு

நடப்பு ஆண்டில் கொரோனாவின் தாக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்தாலும், மிக வேகமாக போடப்பட்டு வந்த தடுப்பூசி, குறைந்த வட்டி விகிதம், வட்டி விகிதம் குறித்தான பேச்சு வார்த்தைகள், பத்திரம் வாங்குதல் குறைப்பு பற்றிய பேச்சு வார்த்தை, சர்வதேச பொருளாதாரம், பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம், கிரிப்டோக்கள் மீதான ஆர்வம் உள்ளிட்ட பலவும் தங்கத்தின் மீதான ஆர்வத்தினை குறைத்துள்ளன.

ஈக்விட்டிகள் மீதான ஆர்வம்

ஈக்விட்டிகள் மீதான ஆர்வம்

சர்வதேச சந்தைகள் மீதான ஈக்விட்டி சந்தைகள் மீதான ஈர்ப்பின் காரணமாக, சந்தையானது சரிவினைக் கண்டாலும், மீண்டும் குறைந்த விலையானது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் தொடர்ந்து சர்வதேச சந்தைகள் முதலீடுகள் செய்யப்படுவதும், வெளியேறுவதுமாகவே இருந்தது. இது தங்கத்தின் மீதான ஆர்வத்தினை குறைத்தது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

எனினும் சீனாவின் நிலவி வந்த மந்த நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட பலவும் தங்கம் விலையானது பெரியளவில் சரிவதை தடுத்தன. மேலும் சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிரான ஹெட்ஜிங் ஆக தங்கம் பார்க்கப்பட்டது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்தது.

வட்டி விகிதம் மாற்றம்

வட்டி விகிதம் மாற்றம்

எனினும் வரவிருக்கும் புதிய ஆண்டில் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தில் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். பொதுவாக வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், அது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். 2022ல் தங்கம் விலையானது மூன்று முறையாவது அதிகரிக்கப்படலாம் என அமெரிக்க முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்கம் அடுத்த ஆண்டிலும் தனது கம்பீரத்தினைக இழக்குமா? பாதுகாப்பு புகலிடம் என்ற பெயர் மாறுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குறைந்த விலையில் வாங்கலாம்

குறைந்த விலையில் வாங்கலாம்

எனினும் தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் 10 கிராமுக்கு அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 9,000 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. ஆக குறைந்த விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். ஆக இதனால் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க கூடும்.மேலும் நீண்டகால நோக்கில் பணவீக்கமும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

பொருளாதார வளர்ச்சி சரிவு

பொருளாதார வளர்ச்சி சரிவு

அடுத்த ஆண்டில் ஜிடிபி விகிதம் நேர்மறையாக இருக்கலாம். எனினும் ஒரு கீழ் நோக்கிய திருத்தம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2022ல் சர்வதேச பொருளாதாரம் 5.9% வளர்ச்சி காணலாம் என்றும், இது 2022ல் 4.9% வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவர் வேல்வியூவில் பங்குகள்

ஓவர் வேல்வியூவில் பங்குகள்

ஈக்விட்டி சந்தையிலும் பங்குகள் ஓவர் வேல்யூவில் இருப்பாதால் ஒரு பெரும் சரிவு இருக்கலாம். ஆக அந்த சரிவு தங்கத்திற்கு சாதகமான அமையக்கூடும். ஆக மொத்தத்தில் தங்கம் விலை குறைந்தாலும், பெரியளவில் குறையாது என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக 10 கிராமுக்கு 40,000 - 42,000 ரூபாய் முக்கிய சப்போர்ட் லெவல் ஆகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 54,000 - 56,000 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 4.80 டாலர் அதிகரித்து, 1818.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.47% அதிகரித்து, 23.168 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 47,874 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தினசரி கேண்டில் பேட்டர்னில் டபுள் பாட்டம் பார்ம் ஆகியுள்ளது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 103 ரூபாய் அதிகரித்து, 62,263 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 23 ரூபாய் அதிகரித்து, 4525 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 36,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 4,937 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 39,496 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையிலும் இன்று சற்று குறைந்துள்ளது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா குறைந்து 65.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 654 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 65,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கம் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 31st December 2021: gold rate may shine in 2022

gold price on 31st December 2021: gold rate may shine in 2022/6 வருடத்தில் இல்லாதளவு வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. 2022ல் தூள் கிளப்பலாம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X