தங்கத்திற்கான தள்ளுபடிகள் அதிகரிக்கலாம்.. அப்படின்னா விலை குறையுமா.. எவ்வளவு குறையலாம்..!

மத்திய பட்ஜெட் 2022 நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், டீலர்கள் தங்கத்திற்கான தள்ளுபடிகளை அதிகரித்துள்ளனர். இந்த தள்ளுபடியானது கடந்த வாரத்தில் அவுன்ஸூக்கு 3 டாலர்கள் வரையில் இருந்தது.

இதற்கு முந்தைய வாரத்தில் விலையானது 2.5 டாலர்கள் பிரீமியத்தில் இருந்தது.

இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது தள்ளுபடி விலையில் கிடைத்தாலும், தங்கத்திற்கான இறக்குமதி வரியாக 10.75%மும், ஜிஎஸ்டி வரியாக 3% வசூலிக்கப்படுகின்றது. இது முன்னதாக 12.5% ஆக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த 2021 - 22 பட்ஜெட்டில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடி அதிகரிக்கலாம்

தள்ளுபடி அதிகரிக்கலாம்

ஆக சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், அது இந்தியாவில் வரியாக கழிக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு பெரியளவில் விலையில் தாக்கம் இருக்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், விலை அதிகளவில் ஏற்றம் காண வாய்ப்பில்லை எனலாம்.இதற்கிடையில் இந்த தள்ளுபடியான இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விலை இன்னும் குறையலாம்.

பலத்த சரிவு

பலத்த சரிவு

கடந்த மூன்று அமர்வுகளில் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கணடுள்ளது. இதே போல வெள்ளி விலையும் 1.4% கீழாக காணப்படுகின்றது. இதற்கிடையில் தங்கமானது மீண்டும் முக்கிய முதலீடாக முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர். இது கடந்த வாரத்தில் அமெரிக்கா பத்திர வாங்குதலை குறைக்கலாம். ஃபெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற பலமான எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது.

மீண்டும் குறையலாம்

மீண்டும் குறையலாம்

ஆனால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் மார்ச் மாதத்தில் வட்டியில் கண்டிப்பாக மாற்றம் செய்யப்படும் என கூறியுள்ளது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி. ஆக அவ்வாறு வட்டி விகிதம் அதிகரிக்கும்போது டாலரின் மதிப்பானது மேலும் வலுவடையலாம். இதன் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதரவு

ஆதரவு

எப்படியிருக்கும் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில், ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதமும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம்.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

சில தினங்களுக்கு முன்பு உலக தங்க கவுன்சில் தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் மீண்டும் அதிகரிக்கலாம் என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. இது நடப்பு ஆண்டில் 800 - 850 டன்னாக அதிகரிக்கலாம் என்றும் இது கடந்த ஆண்டில் 797.3 டன்னாகவும் உள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என WGC-யின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியான சோமசுந்தரம் பி ஆர் கூறியிருந்தார்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து,1786.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

வெள்ளி விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.262 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை சற்று மேலாகவே காணப்படுகின்றது. அதே நேரம் குறைந்தபட்ச விலையை உடைக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, 47,589 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 139 ரூபாய் குறைந்து, 60,895 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 4,527 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து, 36,216 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 4939 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து, 39,512 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,390 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா குறைந்து, 65.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 654 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 65,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினையும், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+