தங்கம் விலை 2015க்கு பிறகு மோசமான சரிவு.. வருடத்தின் முதல் வர்த்தக நாளிலும் சரிவு தான்..!

தங்கம் பாதுகாப்பு புகலிடம் என்ற வரிகள் கடந்த 2021ம் ஆண்டில் பொய்யாகின எனலாம். ஏனெனில் கடந்த 2015க்கு பிறகு மிக மோசமான சரிவைக் கண்டுள்ளது. தங்கத்தின் வரலாற்று உச்ச விலையானது 56,200 ரூபாய் என்ற விலையில் இருந்து, 8,000 ரூபாய் சரிவில் காணப்பட்டது.

இதுவே முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் சரிவில் காணப்படுகின்றது.

எனினும் தங்கத்திற்கு ஆதரவாக கொரோனா, ஓமிக்ரான் என வரிசைக் கட்டி ஆதரவளிக்க பல காரணிகள் சந்தையில் வந்து கொண்டுள்ளன.இதற்கிடையில் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது சாதகமாக அமைந்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டிலேயே பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சிறந்த இடமாகவே பார்க்கப்படுகிறது.

2021ல் காமெக்ஸ் நிலவரம்

2021ல் காமெக்ஸ் நிலவரம்

கடந்த ஆண்டில் 2021ல் சர்வதேச சந்தையில் 3.5% சரிவினைக் கண்டு, 1828.60 டாலர்கள் என்ற லெவலில் காணப்பட்டது. எனினும் நடப்பு ஆண்டில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேலும் அழுத்தத்தில் காணப்படுகின்றது.

பத்திர சந்தை

பத்திர சந்தை

நடப்பு ஆண்டில் பத்திர சந்தையும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இது பத்திர சந்தை ஏற்றம் கண்டால், தங்கத்தின் மீதான ஆர்வத்தினை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் நுகர்வோர் குறித்தான நம்பிக்கை, பணவீக்கம்,மத்திய வங்கிகளின் வட்டி விகித நடவடிக்கை உள்ளிட்ட பல காரணிகளும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தொடர்ந்து மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள டாலரின் மதிப்பு, பொருளாதார வளர்ச்சி குறித்தான காரணிகள், சீனாவின் எவர்கிராண்டே குறித்தான காரணிகள், ஓமிக்ரான் அச்சம் உள்ளிட்ட பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளன. மேலும் சர்வதேச பங்கு சந்தைகளிலும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதுவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளன.

வட்டி விகித மாற்றம்

வட்டி விகித மாற்றம்

நடப்பு ஆண்டில் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தின் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். பொதுவாக வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், அது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது மூன்று முறையாவது அதிகரிக்கப்படலாம் என அமெரிக்கா முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்கம் விலையானது நடப்பு ஆண்டிலும் தனது கம்பீரத்தினைக இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலையில் வாங்க தூண்டலாம்

குறைந்த விலையில் வாங்க தூண்டலாம்

தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் 10 கிராமுக்கு அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 8,000 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. ஆக குறைந்த விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். ஆக இதனால் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க கூடும்.மேலும் நீண்டகால நோக்கில் பணவீக்கமும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் குறைந்த விலையில் வாங்க தூண்டலாம்.

ஈக்விட்டி சந்தையிலும் பங்குகள் ஓவர் வேல்யூவில் இருப்பதால் ஒரு பெரும் சரிவு இருக்கலாம். ஆக அந்த சரிவு தங்கத்திற்கு சாதகமான அமையக்கூடும். ஆக மொத்தத்தில் தங்கம் விலை குறைந்தாலும், பெரியளவில் குறையாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2.50 டாலர் குறைந்து, 1826.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.72% குறைந்து, 23.183 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 48,119 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், தினசரி கேண்டில் பேட்டர்னில் டபுள் பாட்டம் பார்ம் ஆகியுள்ளது. இதனால் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது அதிகரித்து இருந்தாலும், வெள்ளியின் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 253 ரூபாய் குறைந்து, 62,407 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 10 குறைந்து, 4550 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 36,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4,964 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 39,712 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையிலும் இன்று சற்று குறைந்துள்ளது. இது தற்போது கிராமுக்கு 40 பைசா குறைந்து 66.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 662 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 66,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மிலும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+