தடுமாறும் தங்கம் விலை.. மேற்கொண்டு என்னவாகும்.. கூடுமா? குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பெரியளவில் மாற்றமில்லாமல் ஒரு ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகி வருகின்றது.

இதனையடுத்து தங்கம் விலை இன்னும் குறையுமா? அல்லது அதிகரிக்குமா? குறிப்பாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. ஆக இதன் எதிரொலி இந்திய சந்தையில் எப்படியிருக்கும்? ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் என்ன? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

எக்ஸிட் லைப் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றும் ஹெச்டிஎப்சி லைப்.. பங்குகள் தடாலடி உயர்வு..! எக்ஸிட் லைப் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றும் ஹெச்டிஎப்சி லைப்.. பங்குகள் தடாலடி உயர்வு..!

நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்று வாங்கலாமா? வேண்டாமா? வாருங்கள் பார்க்கலாம்.

ரேஞ்சுக்குளேயே தங்கம் விலை

ரேஞ்சுக்குளேயே தங்கம் விலை

தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி, ஒரு ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகி வருகின்றது. இதனால் இனி தங்கம் விலை எப்படியிருக்கும். அதிகரிக்குமா? குறையுமா? அடுத்து என்ன செய்யலாம் என பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

ரூபாய் மதிப்பு ஏற்றம்

ரூபாய் மதிப்பு ஏற்றம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தொடர்ந்து ரூபாயின் மதிப்பானது, வலுவடைந்து வருகின்றது. இது தங்கத்தின் மதிப்பில் சற்று அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். சொல்லப்போனால் இந்திய சந்தையில் தங்கம் விலை மேற்கொண்டு அதிக ஏற்றம் காணமல் இது ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தினை இந்த ஆண்டு இறுதிக்குள் உடைக்கலாம். இது டாலரின் மதிப்பு வலுவிழந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமையக் கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் டாலரின் மதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்து, பின் ஏற்றம் காணுவதை போலவே காணப்படுகின்றது.

தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம்

தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம்

இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவை என்பது அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இது தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம். இது கடந்த ஆண்டு உச்சமான 56,191 ரூபாயினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக தடைபட்ட திருமண நிகழ்வுகள் இந்த ஆண்டு நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள்

அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள்

ஆப்கானிஸ்தானினை தாலிபான்கள் கைபற்றிய நிலையில், தற்போது ஆட்சியை அமைக்க தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். மேலும் தற்போது வரையிலும் கூட பற்பல பிரச்சனைகளும் உருவெடுத்து வருகின்றது. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு அதிகரிக்கும்?

எவ்வளவு அதிகரிக்கும்?


இதற்கிடையில் நடப்பு ஆண்டின் கடைசி மாதத்திற்குள் தங்கம் விலையானது உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவுன்ஸூக்கு 2000 டாலர்கள் வரையில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்தாலும். நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 3.15 டாலர்கள் அதிகரித்து, 1814.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலை, உச்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. தற்போது 0.23% அதிகரித்து, 23.973 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 47,063 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என இரண்டையும் உடைக்க வில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 98 ரூபாய் அதிகரித்து, 63,383 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையையும், குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது மாற்றமில்லாமல், 4,451 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,608 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் மாற்றமின்றி காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 4,856 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 38,848 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 0.60 பைசா குறைந்து, 67.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 67,800 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வந்த வெள்ளி விலையானது, இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்க சரியான நேரம் என்றே கூறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on 3rd September 2021; gold prices remain range bound

Gold price latest update.. Gold price on 3rd September 2021; gold prices remain range bound
Story first published: Friday, September 3, 2021, 12:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X