பலத்த சரிவுக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..!

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

இது காலை அமர்வில் தடுமாற்றத்தில் இருப்பதும், மாலை அமர்வில் ஏற்றம் காண்பதுமாக இருந்து வருகின்றது.

எப்படியிருப்பினும் தங்கம் விலையானது தொடர்ந்து தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே அவுன்ஸுக்கு 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. இது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், தொடர்ந்து ஏற்றத்தினை காணலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்றம் காணலாம்

ஏற்றம் காணலாம்

தங்கம் விலையானது பெரியளவில் குறையாவிட்டாலும், தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து 1800 டாலர்களுக்கும் மேலாகவே இருந்து வருகின்றது. இது தங்கம் விலையானது சற்று குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற உணர்வினையே ஏற்படுத்தியுள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது, தற்போது சரிவில் காணப்படுகின்றது. பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விரைவில் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தால், அது தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

அதோடு அமெரிக்க வங்கியின் நடவடிக்கைக்கு மத்தியில் இந்திய ரிசர்வ் வங்கியும் விரைவில் வட்டியினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய ரூபாயின் மதிப்பினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் ரூபாயின் காரணமாக இந்திய சந்தையில் தங்கம் விலையாந்து வலுவான நிலையிலேயே இருந்து வருகின்றது.

பத்திர சந்தை

பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையானது அதிகரித்து வரும் நிலையில் தான் இன்று தங்கத்தின் மதிப்பில் பெரியளவில் ஏற்றம் இல்லை எனலாம். இது மேற்கொண்டு ஐரோப்பிய மத்திய வங்கி, பேங்க் ஆப் இங்கிலாந்து, இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளானது விரைவில் தங்கத்தின் விலையில், பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 பணவீக்கம் அச்சம்

பணவீக்கம் அச்சம்

எப்படியிருப்பினும் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது, தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். இது நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம். ஏனெனில் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.

உக்ரைன் பதற்றம்

உக்ரைன் பதற்றம்

உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனையானது பெரும் பதற்றம் அளிக்கும் வகையில் இருந்து வருகின்றது. ரஷ்யா மேற்கொண்டு உக்ரைனுக்கு நெருக்கடியினை கொடுத்தால், அதனால் அமெரிக்கா மேற்கொண்டு பொருளாதார தடையினை ஏற்படுத்தலாம். இது சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 3.30 டாலர்கள் அதிகரித்து, 1807.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலை சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 22.503 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே காணப்படுகின்றது. எனினும் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து, 47,958 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 253 ரூபாய் அதிகரித்து, 60,968 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டிருந்தாலும், ஆபரணத் தங்கம் விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 4,530 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 குறைந்து, 36,240 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 4945 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 39,560 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,450 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது சற்றூ குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 50 பைசா குறைந்து, 65.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 651 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 65,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஆக இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+