தங்கம் விலையானது வருடத்தின் முதல் வர்த்தக நாளே பலத்த சரிவினைக் கண்டது. இன்றும் இதுவரையில் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றன. இது இன்னும் சரிவினைக் காணலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டில் தங்கம் விலையானது 2015க்கு பிறகு மிக மோசமான சரிவைக் கண்டுள்ளது. தங்கத்தின் வரலாற்று உச்ச விலையானது 56,200 ரூபாய் என்ற விலையில் இருந்து, 8,000 ரூபாய் சரிவில் காணப்பட்டது.
இதுவே முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடத்தின் முதல் வர்த்தக நாளான நேற்றும் பலத்த சரிவில் காணப்பட்டது. இது இன்னும் சரிவினைக் காணுமோ? என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வங்கிகளின் நடவடிக்கை
நடப்பு ஆண்டில் மீண்டும் ஓமிக்ரான் அச்சம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் மீண்டும் வட்டி விகிதத்தினை அப்படியே வைத்திருக்குமா? அல்லது திட்டமிட்டது போல் அதிகரிக்குமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபெடரல் வங்கியின் நடவடிக்கை
குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது நடப்பு ஆண்டில் 3 முறை வட்டியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் பத்திர சந்தையும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் பத்திரம் வாங்குதலையும் முழுமையாக குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டைய கிளப்பும் பங்கு சந்தைகள்
நடப்பு ஆண்டில் பங்கு சந்தைகள் தற்போது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம். ஏற்கனவே டாலரின் மதிப்பு மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ள நிலையில், இனி வரும் வாரங்களில் எப்படியிருக்கும் என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.
தொழிற்துறையில் பயன்படும் உலோகங்கள்
இது குறித்து அபான்ஸ் குழுமத்தின் கமாடிட்டி மார்கெட் அவுட்லுக் பற்றி,EVP & கேப்பிட்டல் அன்ட் கமாடிட்டியின் தலைவர் மகேஷ் குமாரிடம் பேசினோம். டிசம்பர் 31 நிலவரப்படி காப்பரின் இருப்பு ஒரே வாரத்தில் 11,335mt அதிகரித்து, 45,162 Mt ஆக அதிகரித்துள்ளது. SHFEல் காப்பர் இருப்பானது அதிகரித்துள்ள அதே வேளையில், LMEல் காப்பர் இருப்பு குறைந்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில், காப்பரின் விலைகள் அதிகரிக்கலாம் என கூறியுள்ளார்.
இதே போல மற்ற உலோகங்கள் குறித்தும் சந்தையில் உன்னிப்பாக கவனித்து வரப்படுகின்றது. இவற்றின் விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 4.40 டாலர்கள் அதிகரித்து, 1804.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் சந்தையில் வெள்ளி
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 22.812 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 86 ரூபாய் அதிகரித்து, 47,802 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 31 ரூபாய் அதிகரித்து, 61,772 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 33 குறைந்து, 4517 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, 36,136 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து, 4,923 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து, 39,384 ரூபாயாகவும் . 10 கிராமுக்கு 49,230 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே போல வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. இது தற்போது கிராமுக்கு 50 பைசா குறைந்து 65.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 657 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 65,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், எனினும் மீடியம் டெர்மிலும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கம் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை: தங்கம் Pre- Booking செய்வதால் நமக்கு என்ன லாபம்? Pre- Bookingஇல் கவனிக்க வேண்டியது என்ன?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications