ரூ.1000 ஏற்றத்திற்கு பிறகு சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு பாருங்க?

தங்கம் விலையானது இன்று காலை அமர்வில் கிட்டதட்ட 1 மாத ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் தற்போது மீண்டும் 1800 டாலர்களுகு கீழாக உடைத்து அவுன்ஸூக்கு 1790 டாலர்கள் என்ற லெவலில் கானப்படுகின்றது.

இது ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, தாய்வான் சீனா பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் குறைந்துள்ளது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வட்டி விகிதமானது அமெரிக்காவினை தொடர்ந்து இந்தியாவிலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தங்கம் தேவையானது முதலீட்டு ரீதியாக குறையலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அமெரிக்க தரவு என்ன சொல்கிறது?

அமெரிக்க தரவு என்ன சொல்கிறது?

அமெரிக்காவின் வேலையின்மை தரவானது வெளியாகியுள்ள நிலையில், இது பொருளாதாரம் சரிவில்

மத்திய வங்கியானது பணவீக்கத்தினை குறைக்க வட்டி விகித்தத்தினை குறைக்க வழிவகுத்தாலும், அது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவின் வேலையின்மை தரவானது மேற்கொண்டு அழுத்ததினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இது டாலரின் விலையில் மேற்கோண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மேற்கோண்டு தொடருமானால், அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக 1760 டாலர்களாகவும், இதனையும் உடைத்தால் மீண்டும் 1730 டாலர்களையும் தொடலாம் என கணித்துள்ளது. இந்த லெவலை உடைத்தால் தங்கம் விலையானது செல்லிங்கிற்கு திரும்பலாமென்றும் எதிர்பார்க்கப்ப்டுகிறது.

நீண்டகால  நோக்கில் எப்படி?

நீண்டகால நோக்கில் எப்படி?

அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று மேலாக ஏற்றம் கண்டுள்ள நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. எப்படியிருப்பினும் உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனையானது, சீனா தைவான் இடையேயான பிரச்சனை என பலவும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக நீண்டகால நோக்கில் தங்கம் விலை ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 13.45 டாலர்கள் குறைந்து, 1793.65 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கிட்டதட்ட 1750 டாலர்கள் வரையில் குறைந்து சற்று மீண்டுள்ளது. இதே வெள்ளி விலை 1.25% குறைந்து, 19.867 டாலராக குறைந்து காணப்படுகின்றது. தங்கம் மறும் வெள்ளி விலை இரண்டும் சற்று சரிவில் தான் மாலை அமர்வில் காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது மாலை அமர்வில், 10 கிராமுக்கு, 225 ரூபாய் குறைந்து, 51,940 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 586 ரூபாய் குறைந்து, 57,400 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக குறைந்து காணப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+