தங்கம் விலையானது கடந்த அமர்வில் சற்று அதிகரித்துள்ள நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது இன்னும் சரிவினைக் காணுமா? வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த அமர்வில் தங்கத்தின் இறக்குமதியானது கடந்த 2021ம் ஆண்டில் முந்தைய ஆண்டினை காட்டிலும் இருமடங்கு அதிகரித்துள்ளது.
இதன் மதிப்பு 2021ல் 55.7 பில்லியன் டாலராகும். இது முந்தைய ஆண்டினை காட்டிலும் இருமடங்கு அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிப்பு
முந்தைய ஆண்டில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவியது. இதன் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவை தவிர, மற்றவற்றிற்கு செலவு செய்ய யோசித்தனர். இதன் காராணமாக தேவையானது மிக மோசமாக சரிவினைக் கண்டது. இதற்கிடையில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், பிற்பாதியில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக தேவையானது மிகப்பெரிய அளவில் இருந்ததது.
விழாக்கால பருவங்கள்
குறிப்பாக முதல் அலையின்போது சில்லறை வாடிக்கையாளர்கள் தரப்பில் பெரும் வீழ்ச்சி கண்டது. இந்த காலகட்டத்தில் கடுமையான கட்டுப்பாட்டினால் திருமணம், உள்ளிட்ட விழாக்கால பருவங்கள் கொண்டாட படவில்லை. இதற்கிடையில் தான் தேவையானது மிக மோசமான வீழ்ச்சி கண்டது. ஆனால் கடந்த ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட விழாக்கள் அனைத்தும் நடத்தப்பட்டன. இதுவும் தேவை அதிகரிப்புக்கு ஒரு காராணமான அமைந்தது.
2020ல் என்ன நிலவரம்?
கடந்த 2020ல் தங்கம் இறக்குமதியானது 22 பில்லியன் டாலர் மதிப்பில் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக 2011ல் 53.9 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2021ல் 1,050 டன்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இதே 2020ல் 430 டன்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் சர்வதேச அளவிலான தங்கம் விலையானது குறைந்திருந்த நிலையில், இது தங்கத்தின் தேவையானது அதிகரிக்க காராணமாக அமைந்துள்ளது.
கவனிக்க வேண்டிய காரணிகள்
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக டாலரின் மதிப்பு, ரூபாயின் மதிப்பு என பலவும் சாதகமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது நடப்பு ஆண்டில் 3 முறை வட்டியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம். இதற்கிடையில் பத்திர சந்தை, பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கை உள்ளிட்ட பலவும் கவனிக்க வேண்டிய காரணிகளாக உள்ளன.
பட்டைய கிளப்பும் பங்கு சந்தைகள்
கடந்த சில தினங்களாக சர்வதேச பங்கு சந்தைகள் தற்போது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளன. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். ஏற்கனவே டாலரின் மதிப்பு மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ள நிலையில், இனி வரும் வாரங்களில் எப்படியிருக்கும் என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.
காமெக்ஸ் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1815.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.995 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, உச்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு சற்று குறைந்து, 47,925 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 298 ரூபாய் குறைந்து, 61,928 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 18 ரூபாய் அதிகரித்து, 4,535 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து, 36,280 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து, 4,948 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 39,584 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே போல வெள்ளி விலையிலும் இன்று சற்று அதிகரித்துள்ளது. இது தற்போது கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 66.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 661 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 66,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், எனினும் மீடியம் டெர்மிலும் சற்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கம் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications