தடுமாறும் தங்கம் விலை.. இன்று வாங்கலாமா.. விலை எப்படியிருக்கு?

தங்கம் விலையானது கடந்த மாதத்தில் 1800 டாலர்களுக்கு அருகில் காணப்பட்ட நிலையில், இன்று வாரத் தொடக்கத்தில் முதல் நாளான இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

இதற்கிடையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறையுமா? அல்லது மீண்டும் 1800 டாலர்களை உடைக்குமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

முதல் நாளே தடுமாற்றம்

முதல் நாளே தடுமாற்றம்

தங்கம் விலையானது வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. கடந்த வாரம் வெளியான அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான தரவானது, தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலரின் மதிப்பினை ஊக்குவிக்க மத்திய வங்கியானது நடவடிக்கை எடுக்கலாம். இது பத்திர சந்தையையும் ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் வலுவான ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 106.93 டாலராகவும், 106.77 டாலராகவும் உள்ளது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் டாலரின் மதிப்பு, மற்ற கரன்சிதாரர்களுக்கு விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இதனால் தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தை

பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரண்டு வார உச்சத்தில் காணப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் அதன் போக்கும் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம். அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவானது,கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியினை காட்டுகின்றது. எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் வட்டி அதிகரிக்கலாம்

இன்னும் வட்டி அதிகரிக்கலாம்

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது இன்னும் 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு டாலரின் மதிப்பு, பத்திர சந்தையை ஊக்குவிக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

ஹெட்ஜிங் ஐடியா

ஹெட்ஜிங் ஐடியா

பணவீக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது சிறந்த ஹெட்ஜிங் ஆக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, சீனா - தைவான் பிரச்சனை என பலவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது மேற்கொண்டு தங்கம் விலை பெரியளவில் சரியாமல் தடுக்கலாம்.

 சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 3.70 டாலர்கள் குறைந்து, 1787.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை சற்று குறைந்து 19.837 டாலராக அதிகரித்து காணப்படுகின்றது. தங்கம் விலை சற்று குறைந்து காணப்படும் நிலையில், வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி, 10 கிராமுக்கு, 23 ரூபாய் குறைந்து, 51,851 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 69 ரூபாய் அதிகரித்து,57,433 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை சர்வதேச சந்தையின் எதிரொலியாக குறைந்து காணப்படுகின்றது. எனினும் வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 4850 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 38,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 5290 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,320 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 630 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 63,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.48,500

மும்பை - ரூ.47,550

டெல்லி - ரூ.47,700

பெங்களூர் - ரூ.47,600

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.48,500

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+