ரூ.8000 மேல் சரிந்த தங்கம் விலை.. இன்னும் சரியலாம்.. ஜாக்பாட் தான்..!

தங்கம் விலையானது இன்று பலமான சரிவில் காணப்படுகின்றது. இது இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்னும் எவ்வளவு சரிவினைக் காணும்?

இந்த விலையிலேயே வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்து என்ன செய்யலாம்.

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு உச்சம்

டாலர் மதிப்பு உச்சம்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகிறது. இது 5 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க டாலருக்கு சாதகமாகவும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்ப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதகமான டேட்டாக்கள்

சாதகமான டேட்டாக்கள்

அமெரிக்காவின் தொழிற்துறை குறித்தான தரவுகள் மற்றும், வேலை விகிதம் தொடர்பான டேட்டாக்கள் என பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளன. இது டாலரின் மதிப்பானது உச்சம் தொட காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் விலையுயர்ந்த ஆபரணங்களின் விலையானது மேற்கொண்டு அழுத்தத்தில் காணப்படுகின்றது.

ரூ.8000 மேல் சரிவு

ரூ.8000 மேல் சரிவு

தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 8,000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நிபுணர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் தங்கம் விலையானது 48,000 ரூபாய்க்கு மேலாக இருந்தால், மேற்கொண்டு அதிகரிக்கலாம் என கணித்துள்ளனர்.

மாற்றம் இருக்கலாம்

மாற்றம் இருக்கலாம்

பண்ணை அல்லாத வேலை குறித்தான தரவானது தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றத்தினை கொண்டு வரலாம்.

மேலும் ஏற்கனவே கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் இன்னும் அதிகரிக்குமா? அல்லது ஓமிக்ரானால் குறையுமா? இது தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கட்டுபாடுகளுக்கு மத்தியில் தங்கத்தின் தேவை அதிகரிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 18.65 டாலர்கள் குறைந்து, 1806.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் பலத்த சரிவினை கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 2% குறைந்து, 22.710 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகின்றது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 290 ரூபாய் குறைந்து, 47,720 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையானது சரிவினைக்
கண்டுள்ளது. தற்போது கிலோவுக்கு 960 ரூபாய் குறைந்து, 61,278 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 18 ரூபாய் குறைந்து, 4,517 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 36,136 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4,923 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 39,384 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,230 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. இது தற்போது கிராமுக்கு 70 பைசா குறைந்து, 65.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 654 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 65,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மிலும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+