தங்கம்(Gold) விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் முதல் வர்த்தக நாளான இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்றாலும், கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன?
தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலை அழுத்தம் காணலாம்
தொடர்ச்சியாக தங்கம் விலையானது மூன்றாவது வாரமாக, வார இறுதியில் ஏற்றத்திலேயே முடிவடைந்தது. இது இன்னும் ஏற்றம் காணுமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பினால் ஏற்றம் கண்டுள்ளது. எனினும் இந்த வாரத்தில் டாலரின் மதிப்பு காரணமாக தங்கம் விலையானது அழுத்தம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசிபி கூட்டம்
ஐரோப்பிய மத்திய வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. ஆக வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனர்ஜி விலை ஏற்றம்
எனினும் தொடர்ந்து எனர்ஜிகளின் விலையானது உச்சம் தொட்டு வரும் நிலையில் இது பணவீக்கத்தினை அதிகரிக்க காரணமாக அமையலாம். ஆக இது வட்டி விகிதத்தினை உந்தலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். வரும் நாட்காள் ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவின் மத்திய வங்கிகள் வட்டி விகிதம் அதிகரிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
ஜிடிபி தரவுகள்
ஐரோப்பா மற்றும் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி குறித்தான முதல் காலாண்டு ஜிடிபி தரவானது, இந்த வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் வரவிருக்கும் நாட்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் தேவையினையும் ஊக்குவிக்கலாம்.
அமெரிக்காவின் பணவீக்கம்
அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது வரவிருக்கும் நாட்களில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. முதலீட்டாளர்களும் இதற்காக காத்துக் கொண்டுள்ளனர் எனலாம். உலகின் முன்னணி பொருளாதார நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கமானது சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.
இந்திய ஆர்பிஐ கூட்டம்
இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்தான முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும்.
காமெக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று ஏற்றத்தினையே கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 7.95 டாலர்கள் அதிகரித்து, 1,858.20 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.73% அதிகரித்து, 22.288 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபடச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்து தான் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து, 51,110 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 837 ரூபாய் அதிகரித்து, 62,506 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இது அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் வெள்ளி விலையும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 4,790 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 38,320 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 5225 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 41,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 68.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 685 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து 68,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். அதேபோல ஆபரண தங்கம் விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. ஆக இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications