தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. வாங்க சரியான வாய்ப்பா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது மீண்டும் கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது அதன் ஆறு வார சரிவில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது இன்னும் ஏற்றம் காணுமா? மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது

இன்று கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? விலை நிலவரம் என்ன? குறிப்பாக சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா? மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா?

ஆறு வார சரிவில் இருந்து மீள்ச்சி

ஆறு வார சரிவில் இருந்து மீள்ச்சி

தங்கம் விலையானது அதன் ஆறு வார சரிவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளது. இது திடீரென கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

டாலர் மதிப்பு?

டாலர் மதிப்பு?

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது, சற்று தடுமற்றத்தில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது வரவிருக்கும் அமர்வுகளிலும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா - ஐரோப்பா
 

ரஷ்யா - ஐரோப்பா

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மேற்கத்திய நாடுகளின் தடையால், ஐரோப்பா படிப்படியாக எரிபொருள் வாங்குவதை குறைத்துக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவுக்கு செல்லுவும் கேஸ் பைப்லைனில் நிறுத்த போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையால் பிரச்சனையை எதிர்கொண்டுள்ள ஐரோப்பாவுக்கு, இது மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் யூரோவின் மதிப்பானது 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

பொருளாதாரத்தில் தாக்கம்

பொருளாதாரத்தில் தாக்கம்

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையினால் ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பிய மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தினையும் அதிகரிக்கும் சூழலில் உள்ள நிலையில், இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

வட்டி  அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையில், தங்கம் நீண்டகால நோக்கில் அதிகரிக்குமா? என்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ஏனெனில் வட்டி அதிகரிக்கப்பட்டால் மீண்டும் டாலரின் மதிப்பு உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பத்திர சந்தைக்கும் சாதகமாக அமையலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம்.

தேவை என்னவாகும்?

தேவை என்னவாகும்?

சர்வதேச அளவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது குறையலாம் என எதிர்பார்ப்பு நிலவினாலும், இந்தியாவினை பொறுத்த வரையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தேவையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம். இது இந்தியாவில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 8.30 டாலர்கள் அதிகரித்து, 1730.95 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் திகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 1.85% அதிகரித்து, 18.210 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலையும் தங்கத்தினை போலவே கடந்த அமர்வின் முடிவு விலையினை இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது தொடக்கத்தில் 10 கிராமுக்கு பெரியளவில் மாற்றமின்றி, 50,433 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 461 ரூபாய் அதிகரித்து, 53,851 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரித்து எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து, 4750 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 38,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 5182 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,456 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 51,820 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 59 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 59 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 59,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,500

மும்பை - ரூ.46,900

டெல்லி - ரூ.47,050

பெங்களூர் - ரூ.46,950

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,500

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 6th September 2022: gold remains confined in a range

gold price on 6th September 2022: gold remains confined in a range / தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. வாங்க சரியான வாய்ப்பா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X