ரூ.9000 மேல் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த அமர்வில் யாரும் எதிர்பாராத விதமாக பலத்த சரிவினைக் கண்டது. இது இன்னும் சரிவினைக் காணுமா? அல்லது ஏற்றம் காணுமா? என்ற பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படும் நிலையில், இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. இது இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலையானது எப்படியுள்ளது? இது இன்னும் குறையுமா? இது நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் ஒமிக்ரான்.. ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுனில் அதிகப் பாதிப்பு..!பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் ஒமிக்ரான்.. ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுனில் அதிகப் பாதிப்பு..!

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

இந்தியாவில் ஓமிக்ரான் தாக்கம் மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்னும் விதமாக காணப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பு ஓமிக்ரான் என்பது சுனாமி வேகத்தில் பரவி வருவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் 1 லட்சம் வழக்குகளை தாண்டியுள்ளது.இது மேற்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

டாலர் மதிப்பு அழுத்தம்

டாலர் மதிப்பு அழுத்தம்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது, கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து உச்சத்தில் காணப்பட்டது. எனினும் ஓமிக்ரான் பரவி வரும் நிலையில், வேலையின்மை நலன் குறித்தான தரவானது சந்தைக்கு எதிராக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டாலரின் மதிப்பில் அழுத்தினை ஏற்படுத்தும் விதமாக, வர்த்தக பற்றாக்குறையும் மிக மோசமாக அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது தொடர்ந்து வரலாறு காணாத அளவு இறக்குமதி அதிகரித்துள்ளதாக அமெரிக்க தரவுகள் கூறுகின்றன.

பத்திர சந்தை ஏற்றம்

பத்திர சந்தை ஏற்றம்

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது, மேற்கொண்டு நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது பல காரணிகளுக்கு மத்தியில் அழுத்தத்திலேயே காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.9000 மேல் சரிவு

ரூ.9000 மேல் சரிவு

தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 9,000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நிபுணர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் தங்கம் விலையானது, 1800 டாலர்களுக்கு மேலாக தொடர்ந்தால், மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 1800 டாலர்களை உடைத்து தற்போது அவுன்ஸூக்கு 1791 டாலர்கள் என்ற நிலையில் காணப்படுகின்றது.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.85 டாலர்கள் அதிகரித்து, 1,791.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலை அதிகரித்திருந்தாலும், வெள்ளி விலையானது சற்று குறைந்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.115 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 47,440 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையானது சரிவினைக்

கண்டுள்ளது. தற்போது கிலோவுக்கு 152 ரூபாய் குறைந்து, 60,274 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 31 ரூபாய் குறைந்து, 4,486 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 35,888 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தொடர்ந்து இரண்டாவது நாளாகவே சரிவினைக் கண்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து, 4,894 ரூபாயாகவும், இதே சவரனுக்கு232 ரூபாய் குறைந்து, 39,152 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 48,940 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையும் இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்துள்ளது. இது தற்போது கிராமுக்கு 90 பைசா குறைந்து, 64.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 645 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்து, 64,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மிலும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 7th January 2021: gold prices falls above Rs.9,000 from record high,is it right time to buy?

gold price on 7th January 2021: gold prices falls above Rs.9,000 from record high,is it right time to buy?/ரூ.9000 மேல் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா..!
Story first published: Friday, January 7, 2022, 12:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X