தங்கம் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம்(Gold) விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.

இது இன்னும் குறையுமா? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன?

டாலரின் மதிப்பு எவ்வளவு? பத்திர சந்தையின் போக்கு எப்படியுள்ளது? அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு? வேறு கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன?வாருங்கள் பார்க்கலாம்.

முதல் நாளே பெரும் ஏமாற்றம்.. இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? முதல் நாளே பெரும் ஏமாற்றம்.. இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

வட்டி விகிதம் அதிகரிக்கலாமோ?

வட்டி விகிதம் அதிகரிக்கலாமோ?

தொடர்ந்து அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

சிபிஐ தரவு

சிபிஐ தரவு

ஜூன் மாதம் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அரை விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்திலும் இந்த நடவடிக்கை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமான வெள்ளிக்கிழமையன்று வெளியாகவிருக்கும், நுகர்வோர் விலை குறித்தான குறியீடானது வெளியாகவுள்ளது. ஆக இதனை பொறுத்தும் தங்கத்தின் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் திட்டம்?

ஐரோப்பிய மத்திய வங்கியின் திட்டம்?

ஐரோப்பிய மத்திய வங்கியும் இந்த வாரத்தில் நடக்கவுள்ள கூட்டத்தில் வட்டி விகிதத்தினை நிச்சயம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இதுவும் தங்கம் விலைக்கு எதிரான ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது.

ஜப்பானின் சம்பள தரவு

ஜப்பானின் சம்பள தரவு

ஜப்பானின் உண்மையான சம்பளம் குறித்தான தரவானது ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்ப்பினை விட குறைந்துள்ளது. இது பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தேவையினை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி

இந்தியாவில் தங்கம் இறக்குமதியானது மே மாதத்தில் கடந்த ஆண்டினை காட்டிலும், 677% அதிகரித்துள்ளது. இது வரவிருக்கும் திருமண பருவம், விழாக்கால பருவம் என அனைத்தும் சில்லறை விற்பனையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் தேவையானது அதிகரித்துள்ளது. இந்த போக்கானது இனியும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலைக்கு மத்தியில், அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்றே வலுவடைந்து காணப்படுகிறது. இது மேற்கோண்டு டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுக்கலாம். இது பத்திர சந்தையும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1843 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. . ஆக மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.35% குறைந்து, 22.015 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து, 50,799 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை 3

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை 3

வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 416 ரூபாய் குறைந்து, 61,883 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. எனினும் மீடியம் வெள்ளி விலையும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, 4,772 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 144 ரூபாய் குறைந்து, 38,176 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 5206 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 41,648 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 80 பைசா குறைந்து, 67.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 677 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, 67,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். அதேபோல ஆபரண தங்கம் விலையும் சரிவில் காணப்படுகின்றது. ஆக இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 7th June 2022: gold prices fall on expectation of rate hikes

Gold prices are down slightly today, the second trading day of the week, amid a variety of factors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X