ஜாக்பாட் தான்.. இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன!

தங்கம் விலையானது இரண்டாவது நாளாக சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. இது பெரியளவில் சரிவினைக் காணாவிட்டாலும், சற்று சரிவில் காணப்படுகிறது.

குறிப்பாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ந்து தங்கம் விலையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெரியளவில் சரிவினைக் காணாவிட்டாலும், சற்று சரிவில் தான் காணப்படுகிறது. எனினும் இது இன்னும் விலை குறையுமா? அல்லது அதிகரிக்குமா? முக்கிய காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தடுமாறும் தங்கம் விலை

தடுமாறும் தங்கம் விலை

தொடர்ச்சியாக இரண்டாவது அமர்வாக தங்கம் விலையானது இன்றும் சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. இது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது உச்சத்தில் இருக்கும் நிலையில், வலுவிழந்த டாலரின் மதிப்பானது சற்று ஆதரவாகவும் இருந்து வருகின்றது. எனினும் அமெரிக்க மத்திய வங்கி பத்திரங்கள் வாங்கும் வாய்ப்புகள் தாமதமாகி வரும் நிலையில், அது தங்கத்திற்கு ஆதரவாக உதவியுள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் ரூபாயின் மதிப்பானது, கடந்த சில தினங்களாகவே சற்று ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இதற்கிடையில் இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

மானிட்டரி கொள்கையில் மாற்றம்

மானிட்டரி கொள்கையில் மாற்றம்

சந்தையில் வளர்ச்சி விகிதமானது தற்போது அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் வேலையின்மை குறித்தான மதிப்பானது தொடர்ந்து குறைந்து வந்து கொண்டுள்ளது. இதனால் தங்கத்தில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை குறைக்க தொடங்கியுள்ளனர். இதற்கியிடையில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் மானிட்டரி கொள்கையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய முடிவுகள் வரலாம்

முக்கிய முடிவுகள் வரலாம்

இதே வெள்ளியினை பொறுத்தவரையில் 23.70 டாலர்களை உடைத்தால், அது இன்னும் பலத்த சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது பலவீனத்தின் அறிகுறி என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் வர்த்தகர்கள் நடப்பு வாரத்தில் வரவிருக்கும் ECB மத்திய வங்கி கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர குறைப்பு குறித்து எச்சரிக்கை

பத்திர குறைப்பு குறித்து எச்சரிக்கை

இதற்கிடையில் விரைவில் பத்திரங்கள் வாங்குவதை அரசு குறைக்கலாம் என்று கூறி வரும் நிலையில், தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில், விரைவில் இந்த கொள்கைகளை மாற்றம் கூடாது எனவும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதற்கிடையில் இது குறித்த அறிவிப்புகளை முதலீட்டாளர்கள் கவனமாக கவனித்து வருகின்றனர்.

நிபுணர்களின் கனிப்பு

நிபுணர்களின் கனிப்பு

தங்கம் விலையானது மேற்கொண்டு இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய உச்சத்தினை எட்டலாம். இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தினை இந்த ஆண்டு இறுதிக்குள் உடைக்கலாம். இது டாலரின் மதிப்பு வலுவிழந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமையக் கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு உச்சமான 56,191 ரூபாயினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் குறித்தான டேட்டா தங்கத்தின் விலையை இன்னும் ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று மீண்டும் இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 14.95 டாலர்கள் குறைந்து, 1818.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தான் தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் இரண்டாவது நாளாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. தற்போது 0.73% குறைந்து, 24.622 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 75 ரூபாய் குறைந்து, 47,350 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் விலை குறைந்துள்ளது. தற்போது கிலோவுக்கு 183 ரூபாய் குறைந்து, 65,109 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 5 ரூபாய் குறைந்து, 4,474 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 35,792 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 5 ரூபாய் குறைந்து, 4,881 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 39,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்றும் மாற்றமின்றி, கிராமுக்கு, 69.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 69,600 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வந்த வெள்ளி விலையானது, இன்றும் விலையில் மாற்றம் காணவில்லை.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது, வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் அதிகரிக்கும் என்பதால் அதனையும் வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+