ரெக்கை இல்லாமல் பறக்கும் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமா?

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வரும் நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

குறிப்பாக தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிந்து காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இது தொடர்ந்து சமீப நாட்களாகவே 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. ஆக இது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்ற உணர்வினையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவின் விவசாயம் அல்லாத பே ரோல் சம்பந்தமான தரவானது வெளியாகவுள்ளது. இது தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம். மேலும் நிதி சந்தைகளானது தொடர்ந்து ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

வேலையின்மை நிலவரம்

வேலையின்மை நிலவரம்

அமெரிக்காவில் வேலை உருவாக்கம் குறித்தான தரவுகள் சந்தைக்கு சாதகமாக இருந்தாலும், தொடர்ந்து வேலையின்மையும் அதிகரித்து வருகின்றன. ஒரு புறம் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், மறுபுறம் பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட சவால்களும் அதிகரித்து வருகின்றன.

$1800

$1800

தொடர்ந்து தங்கம் விலையானது பெரியளவில் குறையாவிட்டாலும், தொடர்ந்து 1800 டாலர்களுக்கும் மேலாகவே இருந்து வருகின்றது. இது தற்போதைக்கு தங்கம் விலையானது சற்று குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற உணர்வினையே ஏற்படுத்தியுள்ளது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

வாங்கலாம்

வாங்கலாம்

தங்கம் விலையானது பணவீக்கம் என்பது தொடர்ந்து கவலையளிக்கும் விஷயமாக இருந்து வரும் நிலையில், நீண்டகால நோக்கில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

உக்ரைன் பதற்றம்

உக்ரைன் பதற்றம்

உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனையானது பெரும் பதற்றம் அளிக்கும் வகையில் தொடர்ந்து இருந்து வருகின்றது. ரஷ்யா மேற்கொண்டு உக்ரைனுக்கு நெருக்கடியினை கொடுத்தால், அதனால் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2 டாலர்கள் குறைந்து, 1819.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலை சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.837 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே காணப்படுகின்றது. எனினும் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, 48,210 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 451 ரூபாய் குறைந்து, 61,583 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத்தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 4,559 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 36,472 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 4974 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 39,792 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,740 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 65.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 651 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 65,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. ஆக இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+