தங்கம் விலை வீழ்ச்சியா.. சாமானியர்களுக்கு கிடைத்த சரியான வாய்ப்பு தான்.. இனியும் விலை குறையுமா?

தங்கம்(Gold) விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. கடந்த 4 வர்த்தக அமர்வுகளில் மூன்றாவது நாளாக இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது.

இது வரவிருக்கும் வட்டி விகித அதிகரிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது.

இது இன்னும் குறையுமா? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்று சரிவில் காணப்படுகிறது. இது கடந்த 4 வர்த்தக அமர்வுகளில் 3 வது நாளாக சரிவில் காணப்படுகிறது. ஆக இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் சரிவில் காணப்படுகிறது.

வட்டி விகித அதிகரிப்பு

வட்டி விகித அதிகரிப்பு

தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பணவீக்கமானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு சற்று ஏற்றம் காணலாம் என்றும், இது தங்கம் விலையில் அழுத்தம் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பணவீக்க தரவு

அமெரிக்காவின் பணவீக்க தரவு

இந்த வார இறுதியில் வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான சிபிஐ தரவானது, தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் எப்போது?

ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் எப்போது?

அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதமானது 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தங்கத்தில் முதலீட்டாளர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது தவிர ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வங்கியின் கணிப்பு

உலக வங்கியின் கணிப்பு

நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் உலக வங்கியானது, சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்பினை குறைத்துள்ளது. இது பல வருடங்களில் இல்லாதளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ள நிலையில், இதுவும் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளது. இதற்கிடையில் வளர்ச்சி விகிதத்தினை 2.9% ஆக குறைத்துள்ளர்து.

ரெசசன் அச்சம்

ரெசசன் அச்சம்

கொரோனா ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது உக்ரைன் ரஷ்யா பிரச்சனையில் சிக்கியுள்ளனர். பல நாடுகளும் பல காரணிகளுக்கு மத்தியில் ரெசசனை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூடீஸ் கணிப்பு

மூடீஸ் கணிப்பு

தங்கம் விலையானது அடுத்த 12 - 18 மாதங்களில் மீண்டும் வலுவான நிலையில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து பணவீக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இது கமாடிட்டிகளின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை மேலும் கமாடிட்டி விலைக்கு ஆதரவாக அமையலாம். பொதுவாக தங்கம் பாதுகாப்பு புகலிடமாக இருப்பதால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியம் டெர்மில் என்ன நிலவரம்?

மீடியம் டெர்மில் என்ன நிலவரம்?

மீடியம் டெர்மில் தங்கம் விலையானது வட்டி விகிதம் அதிகரிப்பினால், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

இதேபோல வெள்ளி விலையும் தொழில் துறையில் தேவை அதிகரிக்கலாம் என்ற நிலையில், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1850.80 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. எனினும் உச்ச விலை குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.135 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 49 ரூபாய் குறைந்து, 50,910 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 49 ரூபாய் குறைந்து, 62,194 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. மீடியம் வெள்ளி விலை குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து, 4,776 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 32 ரூபஅதிகரித்து, 38,208 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து, 5210 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 41,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 68 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 680 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 68,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். அதேபோல ஆபரண தங்கம் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. ஆக இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+