கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வரும் நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.
குறிப்பாக தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
சமீப நாட்களாகவே தொடர்ந்து தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. ஆக இது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்ற உணர்வினையே முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தடுமாற்றத்தில் தங்கம்
அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இரண்டு வார உச்சத்தில் இருந்த தங்கம் விலையானது, இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில் புராபிட் புக்கிங் செய்யலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தை காரணமாக தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது.
பணவீக்க அச்சம்
கச்சா எண்ணெய் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தற்போது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் நுகர்வோர் விலை பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை பெரியளவில் குறையாமல் இருக்க காரணமாக அமைந்துள்ளது.
வட்டி விகிதம்
தொடர்ந்து சந்தைக்கு எதிராக சந்தையில் பணவீக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம். இது மேற்கோண்டு வட்டி விகிதத்தினையும் உயர்த்த மத்திய வங்கிகளுக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய டேட்டா
அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடானது வெளியாகவுள்ளது. இது தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம். இதற்கிடையில் இன்னும் தங்கம் விலையினை ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா- உக்ரைன் பிரச்சனையும் புகைந்து கொண்டுள்ளது. இது சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.35 டாலர்கள் அதிகரித்து, 1829.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. அதோடு கடந்த அமர்வின் உச்ச விலையும், இன்றைய உச்ச விலையும் ஒன்றாக உள்ளது. இதனை உடைத்தால் மேலும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலை சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 23.328 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று மேலாகவே காணப்படுகின்றது. அதிகபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 74 ரூபாய் அதிகரித்து, 48,503 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 335 ரூபாய் அதிகரித்து, 62,702 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத்தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, 4,578 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 36,624 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து, 4995 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து, 39,792 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,950 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.70 ரூபாய் அதிகரித்து, 66.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 668 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1700 ரூபாய் அதிகரித்து, 66,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையில் அதிகரித்தே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. ஆக இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications