2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக தங்கம் என்பது சர்வதேச அளவில் மிக விரும்பப்படும் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகின்றது. எந்தவொரு அசாதாரணமான சூழ்நிலைகளிலும் முதலீட்டாளர்களுக்கு கைகொடுப்பதால் தான் இதனை பாதுகாப்பு புகலிடமாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த ஆண்டில் தங்கம் விலையானது கடந்த ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினையே கொடுத்தது.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தும் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி ஒரு ரேஞ்ச் பவுண்டிலேயே காணப்படுகின்றது.

அமெரிக்காவில் சொகுசு ஹோட்டலை வாங்கும் முகேஷ் அம்பானி.. விலை எவ்வளவு தெரியுமா..? அமெரிக்காவில் சொகுசு ஹோட்டலை வாங்கும் முகேஷ் அம்பானி.. விலை எவ்வளவு தெரியுமா..?

2 மாத சரிவில் தங்கம்

2 மாத சரிவில் தங்கம்

குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலையானது 2 மாத சரிவினைக் கண்டுள்ளது. இது நீண்டகால முதலீட்டாளர்கள் மத்தியில் மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எனினும் நிபுணர்களின் கணிப்பு என்ன? வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படியிருக்கும் இனியும் இந்த சரிவு தொடருமா? அல்லது ஏற்றம் காணுமா? வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.

முதலீடுகள் சரிவு

முதலீடுகள் சரிவு

கடந்த வாரத்தில் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 சதவீத சரிவினைக் கண்டுள்ளது. இது குறித்து நிபுணர்கள் தங்கம் விலையானது இன்னும் தடுமாற்றத்திலேயே உள்ளது. அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக முதலீடுகள், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் குறையத் தொடங்கியுள்ளன.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

தங்கத்தின் விலையில் மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தும் விதமாக, பத்திர சந்தை ஏற்றத்தினால் டாலர் மதிப்பானது, மேலும் வலுவடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேலும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையானது மேற்கொண்டு ஏற்றம் காணுவதை தடுக்கின்றது. இதனை மேற்கொண்டு ஊக்குவிக்கும் விதமாக பங்கு சந்தையும் இருக்கலாம்.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

எப்படியிருப்பினும் வரும் வாரத்தில் தங்கம் விலையானது 1760 டாலர்களை உடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆக வழக்கமாக 1760 - 1830 டாலர்கள் என்ற ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த முக்கிய லெவல்களை உடைத்தால் மேற்கொண்டு வரும் வாரத்தில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் மாற்றப்படலாம்

வட்டி விகிதம் மாற்றப்படலாம்

வரும் வாரத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதம் பற்றிய முக்கிய அறிவிப்பினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு அழுத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜனவரி 25 அன்று நடைபெறவுள்ள அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி அதிகரிக்கப்படலாம் என தெரிகின்றது. இதனை எச்சரிக்கும் விதமாக முன்னதாக ஒரு அறிக்கையில் 2022ல் மூன்று முறை வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என கூறப்பட்டது.

ரூ.8700-க்கு மேல் சரிவில் தங்கம் விலை

ரூ.8700-க்கு மேல் சரிவில் தங்கம் விலை

நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில்,தற்போதைய நிலையில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. அதுவும் உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 8,700 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகின்றது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும், இது நீண்டகால நோக்கில் வாங்க கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்

கொரோனா, டெல்டா வகை கொரோனா, ஓமிக்ரான் என வரிசைக் கட்டி தங்கத்திற்கு ஆதரவளிக்க பல காரணிகள் சந்தையில் வந்து கொண்டுள்ளன. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பணவீக்கம், பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளுக்கும் ஓமிக்ரான் மத்தியில் மீண்டும் வட்டி விகிதங்களை அதிகரிப்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும் மறுபுறம் பல நாடுகளின் பொருளாதாரம் குறித்தான கணிப்புகள், கரன்சி மதிப்புகள், பத்திர சந்தை ஏற்றம், பங்கு சந்தைகள் உச்சம் என பல காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளன.

Comex தங்கம்

Comex தங்கம்

கடந்த வாரத் தொடக்கத்தில் சரியத் தொடங்கிய தங்கம் விலை, பின்னர் சற்று அதிகரித்து, வார இறுதியில் மீண்டும் பலத்த சரிவினைக் கண்டது. வாரத் தொடக்கத்தில் திங்கட்கிழமையன்று 1830.10 டாலர்களாக தொடங்கிய தங்கம் விலையானதும், அன்றே இந்த வாரத்தின் அதிகபட்ச விலையான 1833 டாலர்களை தொட்டு பின் சரிவினைக் கண்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 1781.30 டாலர்களை குறைந்தபட்சமாக தொட்டு, 1796.25 டாலர்களாகவும் முடிவுற்றது. இது வரும் வாரத்திலும் சற்று சரிவினைக் காணலாம் என்றே தெரிகிறது.

Comex வெள்ளி

Comex வெள்ளி

தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் வாரத் தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கி, பின்னர் அதிகரித்து, முடிவில் சரிவிலேயே முடிவடைந்தது. திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 23.395 டாலர்களாக தொடங்கிய வெள்ளி விலை, அதிகபட்சமாக அன்றே 23.460 டாலர்களையும் தொட்டது. வார இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 21.985 டாலர்களையும் தொட்டது. முடிவில் சற்று அதிகரித்து 22.390 டாலர்களாகவும் முடிவுற்றது.

MCX தங்கம்

MCX தங்கம்

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது வாரத் தொடக்கத்தில் குறைந்து, பின்னர் அதிகரித்து, வார இறுதியில் மீண்டும் சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராமுகு 48,050 ரூபாயாக தொடங்கிய தங்கம் விலையானது, அதிகபட்சமாக புதன்கிழமையன்று 48,161 ரூபாயினை எட்டியது. அதன் பிறகு மீண்டும் சரியத் தொடங்கிய தங்கம் விலையானது, வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 47,300 ரூபாயினை குறைந்தபட்சமாக தொட்டது. எனினும் முடிவில் 47,452 ரூபாயாகவும் முடிவடைந்தது. இது வரும் வாரத்திலும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நாளை தொடக்கத்தினை பொறுத்தும் வர்த்தகம் செய்வது நல்லது.

MCX வெள்ளி

MCX வெள்ளி

வெள்ளியின் விலையானது வார தொடக்கத்தில் சரிவில் தொடங்கியது. இரண்டாவது நாள் ஏற்றம் காண ஆரம்பித்த தங்கம் விலை தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சரிவினைக் கண்டது. மீண்டும் வார இறுதியில் சரிவினைக் கண்டு முடிவடைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று கிலோவுக்கு 62,465 ரூபாயாக தொடங்கியது. அன்றே அதிகபட்சமாக 62,638 ரூபாயினையும் தொட்டது. குறைந்தபட்சமாக வெள்ளிக்கிழமையன்று 60,012 ரூபாயினை தொட்டது. இதே முடிவில் 60,607 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது ஒரே வாரத்தில் 2,000 மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இதே வரலாற்று உச்சத்தில் இருந்து 17,000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் நிலவரம்

ஆபரண தங்கம் நிலவரம்

இன்று ஆபரணத் தங்கத்தின் வியோலையானது பெரியளவில் மாற்றமில்லை. இன்று கிராமுக்கு 4493 ரூபாயாகவும், சவரனுக்கு 35,944 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 10 கிராமுக்கு 44,930 ரூபாயாகவும் உள்ளது. இது இந்த வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு 36,400 ரூபாயாகவும் இருந்தது. ஒரு வாரத்தில் சவரனுக்கு 456 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இன்று தூய தங்கத்தின் விலையானது 4901 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,010 ரூபாயாகவும், கிலோவுக்கு 49,010 ரூபாயாகவும் உள்ளது. இது இந்த வாரத் தொடக்கத்தில் 49,640 ரூபாயாகவும் உள்ளது. ஒரே வாரத்தில் 630 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளி

இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 64.60 ரூபாயாக உள்ளது. இதே 10 கிராமுக்கு 646 ரூபாயாகவும், கிலோவுக்கு 64,600 ரூபாயாகவும் உள்ளது. இது நடப்பு வாரத் தொடக்கத்தில் 66,200 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி என்ன செய்யலாம்?

இனி என்ன செய்யலாம்?

மீடியம் டெர்ம் வர்த்தகர்களை பொறுத்தவரையில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம். இதே நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். பொறுத்திருந்து வாங்கும்போது, இன்னும் லாபம் அதிகமாக கிடைக்கலாம். எனினும் பொறுமையுடன் ஸ்டாப் லாஸ் வைத்து வணிகம் செய்வது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 9th January 2022: gold prices at 2 month low. is it right time to buy gold

gold price on 9th January 2022: gold prices at 2 month low. is it right time to buy gold/2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X