தங்கம்(Gold) விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது.
பொதுவாக தங்கம் என்றாலே இந்தியாவில் விருப்பமான ஆபரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆக இது விலை அதிகரித்திருந்தாலும், விலை குறைந்திருந்தாலும் மக்கள் வாங்குவதை வாங்கிக் கொண்டு தான் உள்ளனர். எனினும் விலை குறைவானது இன்னும் நிறைய தங்கத்தினை வாங்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பெரியளவில் மாற்றமில்லை ஏன்?
இதே முதலீட்டு ரீதியாக வரவிருக்கும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினைக் கொடுக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். எனினும் பல காரணிகள் தங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில் அது அதிகளவிலான சரிவினைக் தடுத்துள்ளது.
பணவீக்க அச்சம்
நாளை வெளியாகவிருக்கும் பணவீக்கம் குறித்தான தரவானது, தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை வழிவகுக்கலாம்.
விலை அதிகரிக்கலாம்
தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனலாம். ஏனெனில் தொடர்ந்து நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தம் என ப்லவேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் , பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை நோக்கி முதலீடு செய்ய வைக்கலாம். இதனால் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 2000 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெசசன் அச்சம்
தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றமான நிலையானது பணவீக்கத்தினை ஊக்குவித்து வருகின்றது. இது ரெசசன் அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
பல்வேறு சவால்கள்
கோல்டுமேன் சாச்சஸ் குழுமம் சர்வதேச பொருளாதாரம் குறித்த கணிப்பில், பல்வேறு சவால்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக போரினால் பணவீக்கம் உச்சம் தொட்டு வருகின்றது. இது அசாதாரண நிலையானது முதலீட்டாளர்களை பாதுகாப்பாக இருக்க செய்யலாம் என கூறியிருந்தது. ஆக பாதுகாப்பு புகலிடம் என்பதே சிறந்த பாதுகாப்பானதாக இருக்கும் என கோல்டுமேன் அறிக்கையினை சுட்டிக் காட்டி நிபுணர்கள் கணித்துள்ளனர்.
முக்கிய லெவல்
தங்கம் விலையானது சமீப காலமாகவே 1800 - 1900 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது இந்த ஆண்டின் இறுதிக்குள் 1950 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது சமீபத்திய நாட்களாகவே தொடர்ந்து 1850 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வரும் நிலையில், இது ஏற்றம் காணலாம் என்ற உணர்வினையும் ஏற்படுத்தியுள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1856.05 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.117 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து தான் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 39 ரூபாய் அதிகரித்து, 51,090 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை.. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம்.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 139 ரூபாய் அதிகரித்து, 62,165 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் வெள்ளி விலை குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 4,806 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 38,448 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து, 5243 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து, 41,944 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 68 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 680 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 68,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். அதேபோல ஆபரண தங்கம் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. ஆக இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications