தங்கம் விலையில் ஏன் இந்த தடுமாற்றம்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா.. இனி என்னவாகுமோ?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வரவிருக்கும் கூட்டத்தில், கட்டாயம் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஷார்ட் கவரிங் காரணமாகவும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அதகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே பெரியளவில் மாற்றமின்றி 1700 - 1730 டாலர்களுக்கு இடையிலேயே வர்த்தகமாகி வருகின்றது.

டாலர் ஏற்றம்

டாலர் ஏற்றம்

டாலரின் மதிப்பு தொடர்ந்து 20 வருட உச்சத்தில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் டாலரில் தங்கம் வாங்குபவர்களுக்கு இது காஸ்ட்லியாக இருக்கும். ஆக இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

வட்டி விகிதம் என்னவாகும்?

வட்டி விகிதம் என்னவாகும்?

வரவிருக்கும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஐரோப்பிய மத்திய வங்கியானது 50 - 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு மீண்டும் வலுவான நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெட்ஜிங்

ஹெட்ஜிங்

சர்வதேச அளவில் மந்தமான வளர்ச்சியே காணப்படுகின்றது. இதற்கிடையில் மீண்டும் வட்டி அதிகரித்தால் அது மேலும் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் பணவீக்கமும் உச்சத்தில் இருக்கும் நிலையில், பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 11.15 டாலர்கள் அதிகரித்து, 1731.35 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை.. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள போதில், வெள்ளி விலையும் 1.58% அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது 18.733 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அமர்வின் உச்சத்தினை உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 157 ரூபாய் அதிகரித்து, 50,513 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்சம், குறைந்த விலையையும் உடைக்கவில்லை. எனினும் சற்று தடுமாறினாலும் மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 654 ரூபாய் அதிகரித்து, 54,935 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் உச்சத்தினையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 4735 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 37,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 5165 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,320 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 51,650 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, 60.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 603 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 60,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?


22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,350

மும்பை - ரூ.46,650

டெல்லி - ரூ.46,750

பெங்களூர் - ரூ.46,800

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,350

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+