தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் பலத்த ஏற்றம் கண்ட நிலையில், இன்று சற்று குறைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன?
சற்றே சரிந்த தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் பெரியளவில் தங்கம் விலையானது சரியாதது, மீண்டும் வழக்கம்போல ஏற்றம் கண்டு விடுமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று தங்கம் விலையானது 1970 டாலர்களை உடைக்கலாம் என்று நிபுணர்கள் கூறியிருந்த நிலையில் 1982.70 டாலர்களாக உச்சம் தொட்டது. அதேபோல முடிவு விலையும் 1976.10 டாலராக முடிவுற்றுள்ளது.
தங்கத்தின் விலையை தூண்டும் பணவீக்கம்
அமெரிக்காவின் பணவீக்க விகித தரவும் சற்றே அதிகரித்தே வெளியாகியுள்ளது. குறிப்பாக நுகர்வோர் விலை குறியீடு குறித்தான குறியீடானது 4 தசாப்தங்களில் இல்லாதளவுக்கு 8.5% ஆக அதிகரித்துள்ளது. எனினும் எதிர்பார்த்த அளவு மோசம் இல்லை, அடிப்படை சற்று மேம்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல இந்தியாவின் சில்லறை பணவீக்கமும் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. ஆக இது மத்திய வங்கியின் கொள்கைகளை கடுமையாக்க தூண்டலாம். குறிப்பாக வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி அதிகரிப்பு நிச்சயம் இருக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
டாலர் மதிப்பு சரிவு
அமெரிக்க டாலரின் மதிப்பானது பணவீக்க விகிதம் அதிகரித்ததாக தரவுகள் வெளியான நிலையில், மீண்டும் சரிவினைக் கண்டது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்தன. இதன் காரணமாகத் தான் கடந்த அமர்வில் தங்கம் விலையானது பலமான ஏற்றத்தினை கண்டது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதாரவாக அமைந்துள்ளது. இனியும் தங்கத்தின் விலை அதிகரிக்க இது காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திர சந்தையும் சரிவு
அமெரிக்க பத்திர சந்தையானது கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், மீண்டும் தற்போது சரிவினைக் காண தொடங்கியுள்ளது. ஆக இது வட்டியில்லா முதலீடாக இருந்தாலும், பாதுகாப்பு புகலிடமாக உள்ள நிலையில் தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்துள்ளது. எப்படியிருப்பினும் பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி அதிகரித்தால், அது பத்திர சந்தையையும் ஊக்குவிக்கும். எனினும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். ஆக இதுவும் தங்கத்திற்கு முதலீடுகளை மாற்ற வழிவகுக்கும்.
வட்டி விகிதம் அதிகரிப்பு இருக்குமா?
ஒரு புறம் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் வட்டி விகிதம் இந்த முறை கட்டாயம் பெரியளவில் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டாலும், மறுபுறம் இது மார்ச் மாத பணவீக்கம் என்பது கடுமையான நடவடிக்கையினை தளர்த்தலாம். இது வசந்த காலத்தின் முதல் மாதத்தில் இருப்பது தான். ஆக வட்டி விகிதம் பெரியளவில் அதிகரிப்பு இருக்குமா? என்பது கவனிக்க வேண்டிய விஷயம் தான் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உக்ரைன் நெருக்கடி
எப்படியிருப்பினும் தொடர்ந்து உக்ரைனில் நிலவி வரும் பதற்றம், இன்னும் பணவீக்கத்தினை தூண்டும் விதமாகவே உள்ளது. இது சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியினை சரியத் தூண்டலாம். இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
டெக்னிக்கல் எப்படியுள்ளது?
டெனிக்கலாக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அனைத்து குறிகாட்டிகளும் வலுவாக ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த அமர்வின் உச்சத்தினை உடைத்தால் தங்கம் விலையானது வலுவான ஏற்றத்தினை காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 7 டாலர்கள் குறைந்து, 1969.10 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி
வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 25.685 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. இதற்கிடையில் வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறைந்தாலும், மீண்டும் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம்
இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 52,898 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறைந்தாலும், மீண்டும் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் வெள்ளி
வெள்ளியின் விலையும் இந்திய சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 167 ரூபாய் அதிகரித்து, 68,957 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலையானது, சென்னையில் கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 4987 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 39,896 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 5440 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 43,520 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 54,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 1.10 பைசா அதிகரித்து, 73.80 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 738 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1100 ரூபாய் அதிகரித்து, 73,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கம்,டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா - உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications