தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது தங்க முதலீட்டாளர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த அமர்வில் நிபுணர்கள் கூறியது போல அவுன்ஸூக்கு 2000 டாலர்களை கடந்தது. எனினும் இன்று முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்து வரும் நிலையில், தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.
இது இன்னும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமா? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
உச்சத்தில் டாலர்
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது கடந்த அமர்வில் 1 வருட உச்சத்தில் காணப்பட்டது. இது இன்னும் வலுவாகவே காணப்படுகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளன.
உச்சத்தில் பணவீக்கம்
சர்வதேச அளவில் உக்ரைன் - ரஷ்யா பிரச்சனையானது விலைவாசியினை மிக மோசமாக தூண்டியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலையானது மிக மோசமான உச்சத்தினை எட்டியது. இதற்கிடையில் அமெரிக்காவின் வருடாந்திர பணவீக்க விகிதமானது டிசம்பர் 1981க்கு பிறகு மிக மோசமான நிலையினை எட்டியுள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம்.
நிச்சயம் வட்டி அதிகரிக்கலாம்
தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கட்டாயம் வட்டி விகிதத்தினை இந்த முறை அதிகரிக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். இதற்கிடையில் அமெரிக்காவின் பத்திர சந்தையும் 2019-க்கு பிறகு உச்சம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூயார்க் ஃபெடரல் தலைவர் ஜான் வில்லியம்ஸ், மத்திய வங்கியானது அரை சதவீதமாவது வட்டியினை அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
முக்கிய லெவல்
தங்கம் விலையானது மீடியம் டெர்மில் 10 கிராமுக்கு 52,500 ரூபாயினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் 54000 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாகவும் சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தினசரி கேண்டில், 5 மணி நேர் கேண்டில் என அனைத்தும் தங்கம் விலை சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்.
காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது 9.40 டாலர்கள் குறைந்து, 1977.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.64% குறைந்து, 25.983 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 141 ரூபாய் குறைந்து, 53,131 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 225 ரூபாய் குறைந்து, 69,750 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் அப் ஆகி சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, 5029 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 40,232 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 5487 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து, 43,896 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 54,870 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 30 பைசா குறைந்து, 74.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 749 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 74,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!



Click it and Unblock the Notifications