இல்லதரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. சர்வதேச நிலவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரிவினைக் காணுமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா?

தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? அடுத்த முக்கிய லெவல்கள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பராக் அகர்வால் வெளியேற்றப்படுவாரா.. எலான் மஸ்க் திட்டம் என்ன..? பராக் அகர்வால் வெளியேற்றப்படுவாரா.. எலான் மஸ்க் திட்டம் என்ன..?

தடுமாறும் தங்கம் விலை

தடுமாறும் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில் கடந்த அமர்வில், 1 மாத சரிவு விலையினையும் உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இந்திய சந்தையிலும் இதே நிலையில் தான் வர்த்தகமாகி வருகின்றது. அதே சமயம் ஆபரணத் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

நேற்றைய சரிவு

நேற்றைய சரிவு

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் இன்று சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும் கடந்த அமர்வில் 10 கிராமுக்கு 850 ரூபாய் குறைந்தும், வெள்ளியின் விலை கிலோவுக்கு 1500 ரூபாய் குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றது. இது கிட்டதட்ட ஒரு மாத சரிவில் காணப்படுகின்றது. தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்க அமெரிக்க டாலரின் மதிப்பு முக்கிய காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்பு சரிவு

டாலரின் மதிப்பு சரிவு

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான அமெரிக்க டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது தங்கம் விலையினை மற்ற கரன்சிதாரர்களுக்கு விலை குறைந்ததாக மாற்றியுள்ளது. ஆக தங்கம் விலைக்கு இது ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே பத்திர சந்தையும் தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

கவலையளிக்கும் பணவீக்கம்

கவலையளிக்கும் பணவீக்கம்

தற்போது சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா மத்தியில், தேவை குறித்தும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. இது தங்கம் மற்றும் வெள்ளி இரண்டிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

அதோடு சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கமும் கவனிக்கப்பட்டு வருகின்றது. இன்றளவிலும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது சுமூக தீர்வினை எட்டியபாடாக இல்லை. இது நீடித்துக் கொண்டே செல்லும் நிலையில், இது பணவீக்கத்தினை இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். குறிப்பாக இந்தியாவில் வரவிருக்கும் திருமண பருவம், அக்ஷ்ய திருதியை உள்ளிட்ட பலவும் தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம். இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

எப்படியிருப்பினும் அமெரிக்காவின் பத்திர சந்தையானது தங்கம் விலையில் ஒரு திருத்தத்தினை கொடுக்கலாம். இது அவுன்ஸூக்கு 1880 டாலர் என்ற லெவலை எட்டலாம். இதே வெள்ளியின் விலையில் 23 டாலர்களை தொடலாம். எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே செய்யும் என்பதால், குறைந்த விலையானது நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் எப்படியுள்ளது?

டெக்னிக்கல் எப்படியுள்ளது?

டெனிக்கலாக தங்கம் விலையானது இண்டிராடே வணிகத்தில் சற்று அதிகரித்தாலும், மீடியம் டெர்மில் மீண்டும் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தை இந்திய சந்தை என இரண்டிலுமே தங்கம் விலையானது தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 9 டாலர்கள் அதிகரித்து, 1904.90 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றம் கண்டாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையை போலவே வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது.இது தற்போது அவுன்ஸூக்கு 0.77% அதிகரித்து, 23.845 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படலாம். எனினும் நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

எம்சிஎக்ஸ் தங்கம்

எம்சிஎக்ஸ் தங்கம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 147 ரூபாய் அதிகரித்து, 51,540 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படலாம். நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளி

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 347 ரூபாய் அதிகரித்து, 65,463 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கேப் அப் ஆகீ மேலாகவே தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது தற்போது தடுமாறினாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்திருந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலை சரிவில் காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 4881 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 39,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 34 ரூபாய் குறைந்து, 5325 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 272 ரூபாய் குறைந்து, 42,600 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 53,250 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இதுவரையில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 70.50 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 705 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 70,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் தடுமாறினாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இது சீனாவின் கொரோனா தாக்கம், தேவை, பணவீக்கம்,டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா - உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on April 26th, 2022: gold prices today struggle near 1 month low; is it a right time buy?

gold price on April 26th, 2022: gold prices today struggle near 1 month low; is it a right time buy? / இல்லதரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. சர்வதேச நிலவரம் என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X