இன்றும் தங்கம் விலை வீழ்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இனியும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்று மீண்டும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதில் தொடர்ந்து 1900 டாலர்களுக்கு கீழாக குறைந்து வர்த்தகமாகி வருகின்றது.இது இன்னும் சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பலவீனமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது.

3 லாபகரமான ஆட்டோமொபைல் பங்குகள்.. வாங்கி வைக்கலாம்.. நிபுணர்களின் செம பரிந்துரை!3 லாபகரமான ஆட்டோமொபைல் பங்குகள்.. வாங்கி வைக்கலாம்.. நிபுணர்களின் செம பரிந்துரை!

தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? அடுத்த முக்கிய லெவல்கள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 2 மாத குறைந்தபட்ச விலையில் தங்கம்

2 மாத குறைந்தபட்ச விலையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், தொடர்ச்சியாக 2வது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது இரண்டு மாத குறைந்தபட்ச விலையானது 51,186 ரூபாயாக உள்ளது. இதே சர்வதேச சந்தையிலும் 1878 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது இன்னும் சரியலாம் என்ற நிலையே காணப்படுகின்றது.

வட்டி கடுமையாகலாம்

வட்டி கடுமையாகலாம்

வரவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் நிச்சயம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பணவீக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இது வட்டி விகிதத்தினை உயர்த்த தூண்டுதலாக இருக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை குறைய காரணமாக அமையலாம்.

ஜனவரி 2017-க்கு பிறகு வலுவான ஏற்றம்

ஜனவரி 2017-க்கு பிறகு வலுவான ஏற்றம்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான அமெரிக்க டாலரின் மதிப்பானது, கடந்த ஜனவரி 2017 முதல் தற்போது வலுவான ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது வட்டி விகிதம் விரைவில் அதிகரிக்கப்படலாம் என்ற யூகத்தின் மத்தியில் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதம் 1880 டாலர்களாக நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், அதனை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் நிலையற்ற நிலை

சீனாவின் நிலையற்ற நிலை

சீனாவில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக பரவி வரும் நிலையில், அங்கு கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இதனை இன்னும் மேம்படுத்தும் விதமாக உக்ரைன் - ரஷ்யா பிரச்சனையும் இன்று வரையில் நீடித்துக் கொண்டுள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு சர்வதேச அளவில் பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தையில் குவியும் கவனம்

பத்திர சந்தையில் குவியும் கவனம்

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அது தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை திருப்பி வருகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதுவும் தங்கம் விலை தொடர்ந்து சரிய ஒரு காரணமாக அமைந்துள்ளது. கூடுதலாக தற்போது சர்வதேச பங்கு சந்தைகளும் ஏற்றம் கண்டு வரும் நிலையில், இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

எப்படியிருப்பினும் சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சீனா, ஐரோப்பிய நாடுகள், பொருளாதார வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை குவிக்கலாம். இது தங்கம் விலைக்கு பாதுகாப்பாக அமையலாம். எனினும் மே 3- 4 தேதிகளில் நடக்கவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் எப்படியிருக்கும் என்பதை பார்த்த பிறகு நீண்டகால நோக்கில் தங்கம் விலையில் முதலீடுகள் அதிகரிக்கலாம்.

ஏற்றம் காணலாம்

ஏற்றம் காணலாம்

தங்கம் விலையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மீடியம் டெர்மில் சரிவினைக் காணலாம் என்றாலும், பணவீக்கம், சர்வதேச பொருளாதாரம் என்பது இன்று வரையில் ரிஸ்க்கான ஒரு பாதையிலேயே உள்ளது. இது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, உலகின் மிக பெரிய பொருளாதார நாடான சீனாவில் பெருந்தொற்றால் முடங்கியுள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் மே 4 அன்று அறிவிக்கப்படும் முக்கிய அறிவிப்புக்கு பிறகு முக்கிய முடிவினை எடுப்பது சிறந்ததாக இருக்கும்.

டெக்னிக்கல் எப்படியுள்ளது?

டெக்னிக்கல் எப்படியுள்ளது?

டெனிக்கலாக தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்று சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே கமாடிட்டி சந்தையிலும் இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று குறைந்த பின்னர் வாங்கலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருந்தால் வாங்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 10.60 டாலர்கள் குறைந்து, 1878.10 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது தற்போதைக்கு குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை 1.53% குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 1.53% குறைந்து, 23.100 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 314 ரூபாய் குறைந்து, 50,888 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று கீழாகவே கேப் டவுன் ஆகி தொடங்கியுள்ளது.கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 928 ரூபாய் குறைந்து 63,752 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே கேப் டவுன் ஆகி தொடங்கியுள்ளது.கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது இந்திய சந்தையில் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிவினைக் கண்டுள்ளது. தற்போது சென்னையில் கிராமுக்கு 44 ரூபாய் குறைந்து, 4837 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து, 38,696 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 47 ரூபாய் குறைந்து, 5278 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 42,224 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 440 ரூபாய் குறைந்து, 52,780 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 1.20 ரூபாய் குறைந்து, 68.80 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 688 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1200 ரூபாய் குறைந்து, 68,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இது சீனாவின் கொரோனா தாக்கம், தேவை, பணவீக்கம், டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா - உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on April 28th, 2022: gold prices today fall to two month low: is it a right time buy?

gold price on April 27th, 2022: gold prices today fall amid high volatility; is it a right time buy? / தங்கம் விலை இன்றும் வீழ்ச்சி.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X