தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.4000 சரிவு தான்.. ஆனால் இன்று நிலையே வேறு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில், 4 அமர்வுகளுக்கு பிறகு இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.

இந்த ஏற்றமானது மீண்டும் தொடருமா? அல்லது மீண்டும் சரிவினைக் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கத்தின் விலையினை ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையினை நீண்டகால நோக்கில் ஊக்குவிக்கலாம்.எனினும் மீடியம் டெர்மில் எப்படியிருக்கும்? தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது எவ்வளவு? இந்திய சந்தையில் தங்கம் விலையானது எவ்வளவு? ஆபரண தங்கத்தின் விலை எவ்வளவு? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பலே பாண்டியா.. சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..! பலே பாண்டியா.. சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

ரூ.4000-க்கு மேல் சரிவு

ரூ.4000-க்கு மேல் சரிவு

இந்திய சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து 51,500 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. எனினும் 10 கிராமுக்கு முந்தைய வாரத்தில் அதிகபட்சமாக 55,558 ரூபாயாக உச்சம் தொட்டது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 4,000 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கும் வர்த்தகர்களுக்கு இது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் அதிகரிப்பு

வட்டி விகிதம் அதிகரிப்பு

எதிர்பார்ப்பினை போலவே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில், கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் இன்னும் பல முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க எடுத்த முக்கிய நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தையும் ஏற்றம்

பத்திர சந்தையும் ஏற்றம்

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதுவும் டாலரின் மதிப்பு இன்னும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதனால் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடரும் பட்சத்தில் இன்னும் தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

பங்கு சந்தைகள் உச்சம்

பங்கு சந்தைகள் உச்சம்

வட்டி விகிதம் அதிகரிப்பின் எதிரொலியாக சர்வதேச பங்கு சந்தைகள் அனைத்தும் இன்று பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. ஆக இதுவும வட்டியில்லா முதலீடான தங்கம் விலையில் அழுத்தத்தினை தானே ஏற்படுத்தும், அப்படியிருப்பினும் ஏன் தங்கம் விலை அதிரித்துள்ளது என்ன காரணம் என்ற கேள்வியும், குழப்பமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

குழப்பமான நிலை

குழப்பமான நிலை

பல்வேறு காரணிகளும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில், தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் இதுவரையில் சுமூக நிலை ஏற்பட்டதாக தெரியவில்லை. ஏற்கனவே பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திய இவ்விரு நாடுகளும், தற்போது மிக மோசமான பொருளாதார சரிவினை கண்டு வருகின்றன. இதற்கிடையில் சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் உக்ரைன் பதற்றமானது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக உள்ளது.

ஷார்ட் கவரிங்

ஷார்ட் கவரிங்

தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே புதிய உச்சத்தினை எட்டி வந்த தங்கம் விலையானது மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கிய நிலையில், பலரும் ஷார்ட் கவரிங்கும் செய்திருக்கலாம். தற்போது அதனை கவர் செய்து வரும் நிலையில், அதுவும் தற்போதைய விலைக்கு ஆதரவாக அமைந்திருக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தினசரி கேண்டில், 5 மணி நேர கேண்டில் என அனைத்தும் தங்கம் விலை சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் கட்டாயம் ஸ்டாப் வைத்து வர்த்தகம் செய்வது நல்லது. இதுவே நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். எனினும் உக்ரைன் - ரஷ்யா இடையே சுமூக நிலை எட்டபட்டால் அது நிச்சயம் தங்கம் விலையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று 4 நாட்களுக்கு பிறகு சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 25.45 டாலர்கள் அதிகரித்து, 1934.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் கட்டாயம் ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்வது நல்லது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2.81% அதிகரித்து, 25.407 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்து காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 353 ரூபாய் அதிகரித்து, 51,500 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 1016 ரூபாய் அதிகரித்து, 68,320 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 4814 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து, 38,512 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து, 5251 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 42,008 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,510 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.60 பைசா அதிகரித்து, 72.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 729 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 72900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், டாலர் மதிப்பு, வட்டி விகிதம் அதிகரிப்பு என பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இன்று ஏற்றத்தினை கண்டுள்ளது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on march 17th 2022: gold prices today up but still down Rs.4000 in a week

gold price on march 17th 2022: gold prices today up but still down Rs.4000 in a week/தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.4000 சரிவு தான்.. ஆனால் இன்று நிலையே வேறு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X