தங்கம் விலையானது கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இன்று சற்று குறைந்துள்ளது.
எனினும் சர்வதேச சந்தையிலும், இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது.
தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா பதற்றமானது அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதற்கு மத்தியில் தங்கம் விலையானது குறைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு வாங்க மிகச்சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மீண்டும் தங்கம் விலையானது சரிவினைக் காணுமா? இனியும் குறையுமா? இனி என்ன தான் நடக்கும்? நிபுணர்களின் கணிப்பு தான் என்ன? முக்கிய காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
எப்போது முடியும் இந்த பிரச்சனை?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை உக்ரைன் மீது நடத்தலாம் என கூறப்படுகின்றது. ஏற்கனவே உக்ரைனின் சில முக்கிய நகரங்களை தங்களின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள ரஷ்யா, முக்கிய துறைமுக நகரங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. மொத்தத்தில் ரஷ்யா உக்ரைன் பதற்ற நிலையில் இப்போதைக்கு சுமூக நிலை ஏற்படுமா? என்ற அச்ச நிலையே ஏற்பட்டுள்ளது.
வட்டி அதிகரிக்கலாம்
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவர் மார்ச் மாத கூட்டத்தில் வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க ஆதரவாக நிற்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் நிச்சயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக அப்படி வட்டி விகிதம் அதிகரித்தால், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் மதிப்பு அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் மத்திய வங்கியானது எதிர்பார்ப்பினை போலவே வட்டி விகிதத்தினை உயர்த்தினால், அது அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுக்கும். இதன் காரணமாக தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பும் தங்கத்திற்கு எதிராக மாறலாம். இதனால் தங்கம் விலையானது அழுத்தத்தினை காணலாம்.
எண்ணெய் விலை தொடர் உச்சம்
எப்படியிருப்புனும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில், தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இது பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமையலாம். குறிப்பாக இந்தியா தனது பயன்பாட்டில் பெரும்ப குதியினை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது ஏற்றம் காணலாம்.
தங்கத்துக்கு ஆதரவாகலாம்
ரஷ்யா மீது பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில் எண்னெய் இறக்குமதியினையும் தடை செய்து வருகின்றன. இதன் காரணமாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் தேவை அதிகரிக்கும் சமயத்தில் உற்பத்தியினை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மொத்தத்தில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலைக்கு இதுவும் சாதகமாக அமையலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 3.50 டாலர்கள் அதிகரித்து, 1925.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் குறைந்து பின்னர் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறையும் போது வாங்கி வைக்கலாம்.
சர்வதேச சந்தையில் வெள்ளி
தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.39% அதிகரித்து, 25.288 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 166 ரூபாய் அதிகரித்து, 51,460 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 266 ரூபாய் அதிகரித்து, 67,229 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தடுமாறினாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து, 4,847 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, 38,776 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து, 5,285 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து, 42,280 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,850 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையானது இன்றும் சற்று ஏற்றத்தினையே கண்டுள்ளது. இது தற்போது கிராமுக்கு 40 பைசா அதிகரித்து,72.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 725 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 72,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது தொடர்ந்து அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், சர்வதேச சந்தையின் எதிரொலியாகவும் அதிகரிக்கலாம். ஆக தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?



Click it and Unblock the Notifications