14 மாத உச்சத்தில் தங்கம் விலை.. இனியாவது குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கம் விலையானது தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றது.சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.

இதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலை என்ன நிலவரம்? மற்ற முக்கிய காராணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

 எப்போது முடியும் பிரச்சனை?

எப்போது முடியும் பிரச்சனை?

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை உக்ரைன் மீது நடத்தலாம் என கூறப்படுகின்றது. 8வது நாளை எட்டியுள்ள இந்த பிரச்சனைக்கு மத்தியில், இன்று இரண்டாவது கட்டமாக உக்ரைன் ரஷ்யா இடையே பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது. இதன் காரணமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. எனினும் உக்ரைனின் சில முக்கிய நகரங்களை தங்களின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள ரஷ்யா, தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது.

 பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

ஆக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பற்பல தடைகளை விதித்து வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைனின் அணு மின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அங்கு கதிர்வீச்சும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த பதற்றத்தினை இன்னும் அதிகரிக்கும் விதமாக உக்ரைன் அரசு உக்ரைனில் வாழும் ரஷ்யர்களின் சொத்துகள் பறிமுதல் செய்ய சட்டம் இயற்றியுள்ளது. இது மேலும் பதற்றத்தினை அதிகரித்துள்ளது.

ரஷ்யாவின் தடை

ரஷ்யாவின் தடை

இதுவரையில் மற்ற நாடுகள் ரஷ்யாவின் மீது பற்பல பொருளாதார தடை உள்ளிட்ட பலவையும் அறிவித்து வந்தன. இந்த நிலையில் அமெரிக்கா உடனான விண்வெளி உறவை ரஷ்யா தடை செய்டுள்ளது. அதோடு அமெரிக்காவுக்கு சப்ளை செய்யப்பட்டு வரும் ராக்கெட் என்ஜின்னையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மொத்தத்தில் எந்த தடைக்கும் ரஷ்யா அரசு செவி சாய்க்கவிலை எனலாம்.

பங்கு சந்தைகள்

பங்கு சந்தைகள்

சர்வதேச பங்கு சந்தைகள் பலவும் இன்றும் பலத்த சரிவிலேயே காணப்படுகின்றன. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரைன் - ரஷ்யா பதற்றமானது இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கலாம் என்ற நிலையில், இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம்.

 வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மார்ச் கூட்டத்தில், வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க ஆதரவாக நிற்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதற்கிடையில் நிச்சயம் இந்த முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக அப்படி வட்டி விகிதம் அதிகரித்தால், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

எப்படியிருப்புனும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில், தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இது பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமையலாம். இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது ஏற்றம் காணலாம்.

 சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 5.80 டாலர்கள் அதிகரித்து, 1941.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.42% அதிகரித்து, 25.317 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலையும் ஒன்றாகவே உள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும், பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 52,005 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 317 ரூபாய் அதிகரித்து, 67,325 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தடுமாறினாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 36 ரூபாய் அதிகரித்து, 4,883 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, 39,064 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 42 ரூபாய் அதிகரித்து, 5,327 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்து, 42,616 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,270 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது இன்று விலையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 72.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 725 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 72,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது தொடர்ந்து அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+