இது ரொம்ப மோசம்.. தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. குறையவே குறையாதா. நிபுணர்களின் கணிப்பு?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் ஏற்றம் கண்டு வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

போகிற போக்கினை பார்த்தால் கடந்த ஆண்டு உச்சத்தினை உடைத்து விடுமோ? இப்படி தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்தால் சாமானியர்கள் இனி கனவில் தான் தங்கத்தை நினைக்கணும் போல. அந்தளவுக்கு தொடந்து உச்சம் தொட்டு வருகின்றது.

குறிப்பாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கிட்டதட்ட நிபுணர்களின் கணிப்பினை போல 2000 டாலர்களுக்கு அருகில் உள்ளது.இதே இந்திய சந்தையிலும் பலத்த ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.இதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

எவ்வளவு தான் அதிகரிக்கும்

எவ்வளவு தான் அதிகரிக்கும்

விலையானது தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலை என்ன நிலவரம்? மற்ற முக்கிய காராணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இந்த லெவலில் தங்கத்தினை வாங்காலாமா? வேண்டாமா? வாருங்கள் பார்க்கலாம்.

 ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை?

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை?

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை உக்ரைன் மீது நடத்தலாம் என கூறப்படுகின்றது. உக்ரைனின் சில முக்கிய நகரங்களை தங்களின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள ரஷ்யா, தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. இதற்கிடையில் உக்ரைனின் சில முக்கிய நகரங்களில் தற்காலிகமாக மக்கள் வெளியேறுவதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 வரலாற்று உச்சத்தின் அருகில்

வரலாற்று உச்சத்தின் அருகில்

தங்கம் விலையானது கடந்த 2020ம் ஆண்டில் 10 கிராமுக்கு 56,200 ரூபாய் என்ற உச்சத்தினை எட்டியது. இது தான் வரலாற்று உச்சமாகவும் உள்ளது. இதற்கிடையில் தற்போது தங்கம் விலையானது 53,500 ரூபாய் என்ற லெவலுக்கு அருகில் வர்த்தகமாகி வருகின்றது. இது வரலாற்று உச்சத்திற்கு அருகிலேயே காணப்படுகின்றது. இந்த உச்சமும் இனி வரவிருக்கும் நாட்களில் உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பற்பல தடைகளை விதித்து வருகின்றன. இதற்கிடையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை எட்டியுள்ளது. இதன் காரணமாக பணவீக்கமும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது ஒரு புறம் எனில் மறுபுறம் பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. இதுவும் விலையினை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் மத்தியில், தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இது பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், மத்திய வங்கிகளின் கூட்டம், பதற்றம், பணவீக்கம், கமாடிட்டிகள் விலை ஏற்றம், பங்கு சந்தை வீழ்ச்சி, ரூபாய் சரிவு, டாலர் மதிப்பு, வெளியாகவிருக்கும் முக்கிய தரவுகள் என பலவும் சந்தையில் எதிரொலிக்கலாம். மொத்தத்தில் தங்கம் விலையானது மேற்கொண்டு ஏற்றம் காணவே பல காரணிகளும் சாதகமாக அமைந்துள்ளன.

 சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பலமான ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 21.35 டாலர்கள் அதிகரித்து, 1987.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1% அதிகரித்து, 26.047 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 969 ரூபாய் அதிகரித்து, 53,528 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 1550 ரூபாய் அதிகரித்து, 70,710 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளியின் விலையும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து, 5055 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, 40,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 92.50 ரூபாய் அதிகரித்து, 5,514.50 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 740 ரூபாய் அதிகரித்து, 44,116 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 55,145 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது இன்று பலத்த ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.80 ரூபாய் அதிகரித்து, 75.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 752 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 75,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது தொடர்ந்து அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+