தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. சொல்லப்போனால் கடந்த ஆண்டு உச்சத்தினை விரைவில் உடைத்து விடுமோ? இப்படி தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்தால், இனி தங்கத்தினை கனவில் தான் நினைக்கணும் போல. அந்தளவுக்கு தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது.
ஆனால் இன்று தொடர் ஏற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இது நீண்டகால நோக்கில் வாங்க மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலை என்ன நிலவரம்? மற்ற முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இந்த லெவலில் தங்கத்தினை வாங்காலாமா? வேண்டாமா? வாருங்கள் பார்க்கலாம்.
கிட்டதட்ட 12% ஏற்றம்
நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது கிட்டதட்ட 12% ஏற்றத்தில் காணப்படுகிறது. இதே சர்வதேச சந்தையில் நடப்பு ஆண்டில் 8.80% ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் இந்த போக்கு மீண்டும் தொடருமா? அல்லது குறையுமா? அடுத்து என்ன செய்யலாம்? குறிப்பாக மே 2021க்கு பிறகு தங்கம் விலையானது மிகப் பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா - உக்ரைன் பதற்றம்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில், அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்க கூடும் என்ற பலத்த எதிர்பார்ப்பு, அதிகரித்து வரும் பல கமாடிட்டிகளின் விலை உயர்வால் பணவீக்கம் உச்சம் உள்ளிட்ட பல காரணிகளுக்கும் மத்தியில் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம்
தங்கம் விலையானது கடந்த 2020ம் ஆண்டில் இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 56,200 ரூபாய் என்ற உச்சத்தினை எட்டியது. இதே சர்வதேச சந்தையில் 2075 டாலர்கள் எண்ற லெவலை தொட்டது. இதற்கிடையில் தற்போது தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அமர்விலேயே 2000 டாலர்களை உடைத்துக் காட்டிய தங்கம் விலையானது, இன்று 2000 டாலர்களுக்கு அருகிலேயே காணப்படுகின்றது.
பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பற்பல தடைகளை விதித்து வருகின்றன. இதற்கிடையில் தொடந்து கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை எட்டியுள்ளது. இதன் காரணமாக பணவீக்கமும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது ஒரு புறம் எனில் மறுபுறம் பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. இதுவும் விலையினை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஃபெடரல் வங்கி கூட்டம்
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் மார்ச் 15 மற்றும் மார்ச் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. நிச்சயம் இந்த கூட்டத்தில் குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகளாவது வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், நீண்டகாலனோக்கில் தங்கம் விலையனது அதிகரிக்கவே பல காரணிகள் சாதகமாக உள்ளன.
முக்கிய லெவல்கள்
தங்கத்தின் முக்கிய லெவலாக 2000 டாலர்களை உடைத்தால், 2050 டாலர்களை தொடலாம் எனவும், இதே இந்திய சந்தையில் அடுத்த இலக்கு 54,000 ரூபாய் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலையானது சுமார் 60% ஏற்றத்தினை கண்டுள்ளது. இதுவும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
ரூபாய் சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தற்போது 76 ரூபாய் என்ற லெவலில் வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது. இது மேற்கொண்டு 77 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.
வரலாற்று உச்சத்தை பிரேக் செய்யலாம்
எனினும் தற்போதைய நிலையில் அடுத்த முக்கிய சப்போர்ட் விலை 1970 டாலர்களாகவும் உள்ளது. அதேசமயம் பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய இந்திய சந்தையிலும் 56,191 ரூபாயாக உச்சம் தொட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.
புராபிட் புக்கிங்
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்றே பல்வேறு நிபுணர்களும் கணித்து வருகின்றனர். இதற்கிடையில் இன்று மட்டும் ஏன் தங்கம் விலை குறைந்துள்ளது என்ற நிலையில், இதற்கு முக்கிய காரணம் புராபிட் புக்கிங் ஆக இருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பலமான ஏற்றத்திற்கு பிறகு, இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1995.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் வெள்ளி
வெள்ளி விலை தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.40% அதிகரித்து, 25.825 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து, 53,550 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைப்பது போல காணப்படுகின்றது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 231 ரூபாய் அதிகரித்து, 70,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளியின் விலையும் மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டாலும் ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து, 5020 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து, 40,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 56 ரூபாய் குறைந்து, 5476 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 448 ரூபாய் குறைந்து, 43,808 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 54,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.10 ரூபாய் குறைந்து, 74.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 746 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1100 ரூபாய் குறைந்து, 74,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது தொடர்ந்து அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறைந்தாலும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!



Click it and Unblock the Notifications