தங்கம் விலை இன்றும் சரிவா.. எவ்வளவு குறைந்திருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?

நம் வீட்டுக்கு செல்லக் குழந்தைகளை கூட நம்மவர்கள் அன்பாக அழைப்பது தங்கம் என தான். அந்தளவுக்கு உணர்வுகளுடன் கலந்துள்ள விலைமதிப்புமிக்க உலோகமான தங்கம். இந்த தங்கம் விலையானது சமீபத்திய நாட்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

ஆக இது தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

அதெல்லாம் சரி, சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண சந்தை என நிலவரம் வாருங்கள் பார்க்கலாம்.

 பணவீக்கம் VS தங்கம்

பணவீக்கம் VS தங்கம்

தங்கம் இன்றைய காலக்கட்டத்தில் போர்ட்போலியோவில் இருக்க வேண்டிய அவசியமான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதோடு பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது. ஆக சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய வங்கி உள்பட பல்வேறு மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 பத்திர சந்தை ஏற்றம்

பத்திர சந்தை ஏற்றம்

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் பணவீக்கத்தினை குறைக்க வட்டி விகிதத்தினை மீண்டும் அதிகரிக்கலாம் என கூறியிருந்தார். இது நிச்சயம் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை உயர்த்த வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தற்போது மீண்டும் டாலரின் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது. பத்திர சந்தையும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளன.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று காலை நிலவரப்படி சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 1.70 டாலர் குறைந்து, 1814.06 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு சற்று குறைந்து, 21.445 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை கீழாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையும் தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 8 ரூபாய் அதிகரித்து, 4747 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 37,976 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது 8 ரூபாய் அதிகரித்து, 5178 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 41,424 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,730 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 30 பைசா குறைந்து, 65.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 651 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 65,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தற்போது மீடியம் டெர்மிலும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+