தங்கம் விலை ரூ.5500க்கு மேல் சரிவு..எப்படி தெரியுமா.. சென்னையில் என்ன நிலவரம்?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. எனினும் இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது கடந்த அமர்வினை போல மீண்டும் ஏற்றம் காணுமா?

தங்கம் விலையானது கிட்டதட்ட 3 மாத சரிவில் காணப்படும் நிலையில் அதனை குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறதா?

இன்று கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? அடுத்து என்ன செய்யலாம். தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது எவ்வளவு? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன?கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? அடுத்த முக்கிய லெவல்கள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ரூ.5600க்கு மேல் சரிவு

ரூ.5600க்கு மேல் சரிவு

தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 5,500 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. இன்று தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், உச்சத்தில் இருந்து பார்க்கும்போது குறைந்த விலையில் தான் காணப்படுகின்றது. இந்திய சந்தையில் 10 கிராமுக்கு உச்ச விலை 56200 ரூபாயாகும். இன்று 10 கிராமுக்கு 50,620 ரூபாய் என்ற லெவலில் உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

 டாலர், பத்திர சந்தை ஏற்றம்

டாலர், பத்திர சந்தை ஏற்றம்

அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தை ஏற்றம் என இரு முக்கிய காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இது பெரியளவிலான சரிவினைக் தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதோடு குறைந்த விலையானது முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம்.

 பங்கு சந்தைகளில் ஏற்ற இறக்கம்

பங்கு சந்தைகளில் ஏற்ற இறக்கம்

சர்வதேச பங்கு சந்தைகளில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் பங்கு சந்தையில், அதிக ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றது. இது முதலீட்டாளர்களை தற்போது முதலீடு செய்யாமல் விலகி நிற்க வைக்கிறது. மாறாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை செய்ய தூண்டலாம். ஆக இதுவும் தங்கம் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

 மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்

தற்போது பங்கு சந்தைகளும் சரிந்து வரும் நிலையில் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடுகள் குறையலாம். இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக இதுவும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களை, தங்கத்தின் பக்கம் ஈர்க்கலாம். இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. இது மேற்கொண்டு விலையினை ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக தங்கம் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

 வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள தொடர்ந்து வட்டி விகிதத்தினை, வரவிருக்கும் கூட்டத்திலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் என்பது கவலையளிக்கும் விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 டெக்னிக்கல் எப்படியுள்ளது?

டெக்னிக்கல் எப்படியுள்ளது?

டெனிக்கலாக தங்கம் விலையானது இண்டிராடே வணிகத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தை இந்திய சந்தை என இரண்டிலுமே தங்கம் விலையானது தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

 காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 1.69 டாலர்கள் குறைந்து, 1839.56 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றம் கண்டாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

 காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையை போலவே வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது.இது தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 21.882 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றம் கண்டாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

 எம்சிஎக்ஸ் தங்கம்

எம்சிஎக்ஸ் தங்கம்


இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 67 ரூபாய் அதிகரித்து, 50,611 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் கேப் டவுன் ஆகி கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படலாம். நீண்டகால வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கி வைக்கலாம்.

 எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளி

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 49 ரூபாய் அதிகரித்து, 61,596 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது தற்போது தடுமாறினாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 31 ரூபாய் அதிகரித்து, 4786 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்து, 38,288 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை


சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 34 ரூபாய் அதிகரித்து, 5221 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 272 ரூபாய் அதிகரித்து, 41,768 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,210 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் அதிகரித்தே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்று கிராமுக்கு 90 பைசா குறைந்து, 65.90 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 659 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து, 65,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் தடுமாறினாலும், நீண்டகால வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இது சீனாவின் பொருளாதார மந்தம், பணவீக்கம்,டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+