தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவில் காணப்படுகின்றது.
இந்திய சந்தையிலும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கோண்டு விலை சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம், சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இது மீடியம் டெர்மில் குறையுமா? அல்லது அதிகரிக்குமா? நீண்ட கால நோக்கில் என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு சற்று குறைந்து, 1,826.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. தற்போது சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், வெள்ளி விலை சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. கடந்த அமர்வில் சற்று சரிவினைக் கண்ட நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது சற்று அதிகரித்து, 24.392 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 64 ரூபாய் குறைந்து, 48,223 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக தற்போது சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், வெள்ளி விலை சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. கடந்த அமர்வில் சற்று ஏற்றத்தினைக் கண்டதை தொடர்ந்து, இன்று மீண்டும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது இன்னும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 226 ரூபாய் அதிகரித்து, 64,796 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 18 ரூபாய் அதிகரித்து, 4,545 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து, 36,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 19 ரூபாய் அதிகரித்து, 4,958 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 39,664 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 10 கிராமுக்கு 49,580 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 69.30 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 69,300 ரூபாயாகவும் காணப்படுகிறது. தொடர்ச்சியாக அவ்வப்போது மாற்றமில்லாமல் காணப்பட்டாலும், ஏற்றத்தினையே கண்டு வருகின்றது.
டாலர் Vs தங்கம்
தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது சரிவில் காணப்படுகின்றது. இது அமெரிக்க பங்கு சந்தைகள் கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், கடந்த அமர்வில் சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக டாலரின் மதிப்பு அழுத்தத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.
பணவீக்கம் Vs தங்கம்
தற்போது அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவின் பொருளாதாரம் இன்னும் மெதுவாக வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு துறைக்கு ஊக்கத் தொகை
நீண்டகால நோக்கில் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க அரசு, உளகட்டமைப்பு துறைக்கு 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்கத் தொகையை அறிவித்துள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு எதிராக அமையலாம் என்றாலும், இது அதிக ஏற்றத்தினை தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் முக்கிய லெவல்
தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது 1830 டாலர்கள் என்ற நிலையில் காணப்படுகின்றது. இதற்கிடையில் 1832 டாலர்களை உடைத்தால் அடுத்த முக்கிய லெவல்கள் 1860 - 1878 டாலர்கள் என பிரித்வி கமாடிட்டி நிபுணர் மனோஜ் குமார் ஜெயின் கணித்துள்ளார்.
தேவை அதிகரிக்கலாம்
இந்திய சந்தையில் தங்கத்தின் தேவையானது வரவிருக்கும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் மத்திய வங்கியும் தங்கத்தில் கவனம் செலுத்தலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.
இன்று என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கினால் ஸ்டாப் லாஸ் என்பது குறைவாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது, தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கலாம்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications