வாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் தான்.. செம சரிவில் தங்கம் விலை.. இன்னும் சரியுமா.. ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று முதலீட்டாளர்களுக்கும், தங்கம் ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகின்றது.

தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், இது டிரேடர்கள் புராபிட் புக்கிங் செய்துள்ளதால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக்பாட் தான்.. முதல் நாளே ஏற்றத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 61,000-க்கு அருகில் வர்த்தகம்..! ஜாக்பாட் தான்.. முதல் நாளே ஏற்றத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 61,000-க்கு அருகில் வர்த்தகம்..!

பொதுவாக இந்திய சந்தையில் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கும். ஆனால் தற்போது எதிர்பார்த்த அளவு தேவையானது அதிகரிக்கவில்லை எனலாம்.

தள்ளுபடி விலையில் தங்கம்

தள்ளுபடி விலையில் தங்கம்

ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி தங்கத்திற்கு வியாபாரிகள் 2 டாலர்கள் வரையில் தள்ளுபடி கொடுத்தும், இது முந்தைய வாரங்களில் 1.5 டாலர்கள் பிரீமிய விலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. நடப்பு மாத தொடக்கத்தில் தந்தோராஸ், தீபாவளியும் கொண்டாடப்பட்டது. தங்கத்திற்கு இறக்குமதி வரியாக 10.75%மும், அதனுடன் ஜிஎஸ்டி 3%யும் வசூலிக்கப்படுகிறது.

தங்கத்தில் புராபிட் புக்கிங்

தங்கத்தில் புராபிட் புக்கிங்

இம்மாத தொடக்கத்தில் இருந்து 10 கிராமுக்கு கிட்டதட்ட 2,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இருந்து வருகின்றது. சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1866.87 டாலர்களாக ஏற்றம் கண்டது. எனினும் இன்று லாபத்தினை புக் செய்யும் விதமாக இருப்பதாக தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. கடந்த நவம்பர் 3 முதல் 110 டாலர்கள் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் லாபத்தினை முதலீட்டாளர்கள் தொடங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவான டாலர் மதிப்பு

வலுவான டாலர் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ள நிலையில், இது தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது. இது மேற்கொண்டு சரிவினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தங்கத்தின் தேவையும் குறைவாகவே உள்ள நிலையில், இது மேற்கொண்டு தங்கத்தின் விலையில் சரிவினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி இல்லா முதலீடு

வட்டி இல்லா முதலீடு

மேலும் தற்போது பத்திரம் வாங்குதல் நடவடிக்கையானது நடப்பு மாதம் முதல் கொண்டு தொடங்கியுள்ள நிலையில், விரைவில் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட்டியில்லா முதலீடான தங்கத்தில், முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் 1892 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியின் விலையானது 26.20 டாலர்களையும் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் முக்கிய சப்போர்ட் 49,100 - 48,850 ரூபாயாகும். ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,550 - 49,700 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 9.05 டாலர்கள் குறைந்து, 1,859.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளி விலை சற்று குறைந்து தான் காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலமான ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இன்று சரிவில் காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியிருந்தாலும், எனினும் நேற்றைய உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. தற்போது 1.24% குறைந்து, 25.032 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

இந்திய கமாடிட்டி சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 174 ரூபாய் குறைந்து, 49,140 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வில் 49,314 ரூபாயாக இருந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 49,170 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

இந்திய கமாடிட்டி சந்தையில் கிலோ வெள்ளியின் விலையானது 602 ரூபாய் குறைந்து, 66,452 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வில் 67,144 ரூபாயாக இருந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 66,669 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 25 ரூபாய் குறைந்து, 4,631 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 37,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 27 ரூபாய் குறைந்து, 5,052 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து, 40,416 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 10 கிராமுக்கு 50,520 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 70 பைசா குறைந்து, 71 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 71,000 ரூபாயாகவும் காணப்படுகிறது. தொடர்ச்சியாக 10 நாட்களில் இன்று தான் சற்று சரிவினைக் கண்டுள்ளது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது, தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் தேவை இருந்தால் அதனை வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on November 15th November 2021; gold prices to remain choppy amid dollar strong

Gold price on November 15th November 2021; gold prices to remain choppy amid dollar strong/ வாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் தான்.. செம சரிவில் தங்கம் விலை.. இன்னும் சரியுமா.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X