தங்கம் முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இனி விலை எப்படியிருக்கும் தெரியுமா?

தங்கம் விலையானது தொடர்ந்து 9வது நாளாக இந்திய சந்தையில் ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 53,000 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 3000 ரூபாய் மட்டுமே குறைவாக உள்ளது. ஆனால் இதுவும் விரைவில் எட்டலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

வெள்ளி விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது இனி வரும் நாட்களில் எப்படியிருக்கும்? வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன ? வாருங்கள் பார்க்கலாம்.

இனி எப்படி இருக்கும்?

இனி எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது ஏற்கனவே தொடர்ச்சியாக 9வது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே நிபுணர்களும் கணித்து வருகின்றனர். தொடர்ந்து இனி வரும் நாட்களில் ஏற்ற இறக்கம் என்பது அதிகரித்தாலும், மார்ச் மாதத்திற்குள் 10 கிராமுக்கு 55,000 ரூபாயினை எட்டலாம் என்றும் கணித்துள்ளனர்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இது தொடர்ந்து 9 மாதங்களாகவே நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் அதிகரித்து வருகின்றது. தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் 2020ல் வரலாறு உச்சமான 56,200 ரூபாய் என்ற லெவலை எட்டியது. இது உலகெங்கிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த சமயத்தில் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தினை எட்டியது. அதன் பிறகு மீண்டும் குறையத் தொடங்கிய தங்கம் விலையானது, தற்போது உக்ரைன் நெருக்கடியால் மீண்டும் ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது.

டாலர் லெவல்

டாலர் லெவல்

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் பார்க்கும்போது மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலரின் மதிப்பு 20 வருட உச்சத்தினை எட்டியுள்ள நிலையில் இது தற்போது 105 என்ற லெவலை எட்டியுள்ளது. இது மீடியம் டெர்மில் 103 என்ற லெவலை வரையில் செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தை நிலவரம் என்ன?

பங்கு சந்தை நிலவரம் என்ன?

சீனா - அமெரிக்கா இடையேயான வணிக உறவானது மேற்கொண்டு ஜி20 மாநாட்டுக்கு பிறகு வலுப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையிலும் தங்கம் விலையானது வலுவாக காணப்படுகின்றது. பங்கு சந்தைகளும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. கரன்சி மதிப்பும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அரசியல் மற்றும் அசாதாரண காலகட்டங்களில், சரியானதொரு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. எனினும் தொடர்ந்து மத்திய வங்கிகள் பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்தாலும், நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாகவே பல காரணிகளும் உள்ளன.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1771.17 டாலர் என்ற லெவலில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாளுக்கு நாள் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது பூதாகரமாகிக் கொண்டே தான் உள்ளது. தற்போது போலந்து அருகே ரஷ்யாவின் ஏவுகணை விழுந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால் இது ரஷ்யாவின் ஏவுகணை அல்ல என்றும் பின்னர் கூறப்பட்டது. எனினும் இது போன்ற சர்ச்சைகள் இனி தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

 கரன்சிகள் வீழ்ச்சி

கரன்சிகள் வீழ்ச்சி

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய நாணயங்கள் சற்றே வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றன. ரூபாயின் மதிப்பானது 81.29 ரூபாயாக இன்று வீழ்ச்சி கண்டும் காணப்படுகின்றது. இந்தியா அதன் தேவைகளில் பெரும்பான்மையான தங்கத்தினை இறக்குமதி செய்தே பெறுகின்றது. ஆக சர்வதேச சந்தையில் நிகழும் ஏற்ற தாழ்வுகள் என்பது இந்திய சந்தையில் பிரதிபலிக்கும் எனலாம்.

COMEX சந்தை நிலவரம் என்ன?

COMEX சந்தை நிலவரம் என்ன?


சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 5.20 டாலர்கள் அதிகரித்து, 1781.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வெள்ளியின் விலையும் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது தற்போது 1.12% அதிகரித்து, 21.750 டாலராக காணப்படுகின்றது. இதுவும் இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

MCX சந்தையில் என்ன நிலவரம்?

MCX சந்தையில் என்ன நிலவரம்?

இந்திய சந்தையில் 10 கிராமுக்கு தற்போது 289 ரூபாய் அதிகரித்து, 53,034 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு 530 ரூபாய் அதிகரித்து, 62,120 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதும் இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாக டெக்னிக்கலாக காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை


ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சென்னையில் கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 4960 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 39,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 5411 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 220 ரூபாய் அதிகரித்து, 54,110 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று மாற்றமின்றி கிராமுக்கு 68.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+