பல நாட்களுக்கு பிறகு சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. முதலீட்டாளர்களுக்கு சரியான சான்ஸ்..!

தங்கம் விலையானது தொடர்ந்து பல நாட்களாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த அமர்வின் முடிவில் சற்று சரியத் தொடங்கியது. இந்த சரிவானது இன்று மீண்டும் தொடர்ந்து கொண்டுள்ளது. இது தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தங்கத்தில் குறைந்த விலையில் வாங்கியவர்கள் தற்போது புராபிட் புக்கிங் செய்யலாம் என்ற நிலையில், இது சரிவினைக் கண்டு வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதோடு அரசியல் பதற்றங்கள் சற்றே குறையலாம் என நம்பப்படுகின்றது. இது ஜி20 மாநாட்டில் பல முக்கிய தலைவர்களும் நேரில் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இந்த நேர்மறையான எதிர்பார்ப்பானது வந்துள்ளது.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

இதற்கிடையில் அமெரிக்காவில் பணவீக்கம் என்பது சற்றே குறைத் தொடங்கியுள்ள நிலையில், இது மத்திய வங்கியினை வட்டியை அதிகரிப்பதை நிறுத்த வழிவகுக்கலாம். அல்லது குறைந்த அளவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆக பணவீக்கம் குறையும்போது தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். இது தங்கம் விலை மீண்டும் குறைய வழிவகுக்கலாம்.

உக்ரைன் ஏவுகணை

உக்ரைன் ஏவுகணை

உக்ரைன் மீது விடுக்கப்பட்ட ஏவுகணை போலந்து நாட்டில் விழுந்து இருவர் பலியான நிலையில்,அது ஆரம்பத்தில் ரஷ்யா ஏவியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதனை ரஷ்யா மறுத்து வந்தது. இது குறித்த முதல் கட்ட விசாரணையில் அந்த ஏவுகணை ரஷ்யாவில் இருந்து ஏவப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் ரஷ்ய ஏவுகனையை தடுக்க உக்ரைன் ஏவிய ஏவுகணையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உக்ரைனும் போலந்தில் விழுந்தது உக்ரைனுடய ஏவுகணையாக இருக்கலாம் என அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மேற்கொண்டு பிரச்சனை சுமூக முடிவுக்கு கொண்டு வர வழிவகுக்கலாம்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதற்கிடையில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி வட்டி அதிகரித்தால் அது தங்கத்தில் மேற்கொண்டு முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.

சில்லறை விற்பனை குறித்தான தரவு

சில்லறை விற்பனை குறித்தான தரவு

அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறித்தான தரவனாது எதிர்பார்த்ததை விட, மேற்கொண்டு அதிகரித்துள்ளது. இது வாகன விற்பனை அதிகரிப்பு உள்ளிட்ட பலவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளதையடுத்து தரவானது மேம்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் நுகர்வானது, அமெரிக்க பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.

பத்திர சந்தை நிலவரம்

பத்திர சந்தை நிலவரம்

அமெரிக்க பத்திர சந்தையானது கிட்டத்தட்ட ஒரு மாத சரிவில் இருந்து வருகின்றது. இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். இது குறைந்த விலையில் பத்திரத்தில் முதலீடு செய்ய தூண்டலாம். இது தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம். இதற்கிடையில் இன்று அமெரிக்காவின் வேலையின்மை தரவு, வணிகம் குறித்தான தரவு, வீடு விற்பனை குறித்தான தரவு, இது தவிர ஆஸ்திரேலியாவின் வேலையின்மை குறித்தான தரவுகள் வெளியாகவுள்ளது. ஆக இவையும் தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

COMEX சந்தையில் தங்கம் & வெள்ளி விலை

COMEX சந்தையில் தங்கம் & வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 10.20 டாலர்கள் குறைந்து, 1765.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் வெள்ளியின் விலையும் தொடர்ந்து சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது தற்போது 1.58% குறைந்து, 21.177 டாலராக காணப்படுகின்றது. இதுவும் இன்னும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 MCX சந்தையில் தங்கம் & வெள்ளி விலை

MCX சந்தையில் தங்கம் & வெள்ளி விலை

இந்திய சந்தையில் 10 கிராமுக்கு தற்போது 236 ரூபாய் குறைந்து, 52,821 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு 765 ரூபாய் குறைந்து, 61,232 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதும் இன்னும் மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாக டெக்னிக்கலாக காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சென்னையில் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4950 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 39,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, 5400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து, 54,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 1.30 ரூபாய் குறைந்து, 67.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+