தங்கம் விலை 6 மாத உச்சத்தில் இருந்து சரிவு.. இன்று எப்படி இருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இது கடந்த அமர்வில் 7 மாத உச்சத்தில் காணப்பட்டது. இதற்கிடையில் இன்று இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 52,885 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையானது 0.4% அதிகரித்து, 61,216 ரூபாயாக வர்த்தகமாகியது.

இதே கடந்த அமர்வில் தங்கம் விலையானது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 53,200 ரூபாயாக உச்சம் எட்டியது. இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1765 டாலர்களாக உச்சம் தொட்டது.

எனினும் டாலரின் மதிப்பானது சற்றே வலுவிழந்து காணப்படும் நிலையில், இது குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலைக்கு ஆதரவு

தங்கம் விலைக்கு ஆதரவு

கடந்த வாரத்திலேயே தங்கம் விலையானது 5.54% அதிகரித்து, 1769 டாலர்களாக காணப்பட்டது. இது பணவீக்கம், தேர்தல் காரணமாக உச்சம் தொட்டிருந்தது. அமெரிக்காவின் பத்திர சந்தையும் வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது. இதுவும் தங்கத்தின் விலையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில்லறை வர்த்தகம் தொடர்பான தரவு

சில்லறை வர்த்தகம் தொடர்பான தரவு

அமெரிக்காவின் சில்லறை வர்த்தகம் தொடர்பான தரவானது வெளியாகவுள்ள நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தரவின் காரணமாக டாலரின் மதிப்பானது உச்சம் தொட்டால் , இது தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம். இதன் காரணமாக முதலீட்டாளார்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

இதற்கிடையில் வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதமானது 50 - 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் நிலையில், அதிக வட்டி விகிதம், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் & வெள்ளி

காமெக்ஸ் சந்தையில் தங்கம் & வெள்ளி

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 2 டாலர் அதிகரித்து, 1764.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. எனினும் இது தற்போது 0.90% அதிகரித்து, 21.165 டாலராக காணப்படுகின்றது. இதுவும் இன்னும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

MCX சந்தையில் தங்கம் & வெள்ளி விலை

MCX சந்தையில் தங்கம் & வெள்ளி விலை

இந்திய சந்தையில் 10 கிராமுக்கு தற்போது 83 ரூபாய் அதிகரித்து, 52,926 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு 305 ரூபாய் அதிகரித்து, 61,283 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதும் இன்னும் மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம் எனும் விதமாக டெக்னிக்கலாக காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சென்னையில் கிராமுக்கு பெரியளவில் மாற்றமின்றி, 4951 ரூபாயாகவும், சவரனுக்கு 39,608 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5401 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 54,010 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 0.20 பைசா குறைந்து, 67 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+