மீண்டும் எகிற ஆரம்பித்துள்ள தங்கம் விலை.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?

டெல்லி: தங்கம் விலையானது இரண்டாவது நாளாக சர்வதேச சந்தையில் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது இந்திய சந்தையிலும், ஆபரணத் தங்கத்திலும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் விலையானது மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. தற்போதைய விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

தங்கம் விலையானது வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாமென்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருந்து வருகின்றது. வட்டி விகிதம் அதிகரித்தால் டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தையானது ஏற்றம் காணலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் மீட்சியா?

பொருளாதாரம் மீட்சியா?

டாலரின் மதிப்பானது சற்றே அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், இது பெரியளவில் ஏற்றம் காணவில்லை. இது செப்டம்பர் காலாண்டில் வேலை வாய்ப்பானது அதிகரித்துள்ளதாக வந்துள்ள தரவினை அடுத்து, பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளதை காட்டுகின்றது.

தேவை குறையலாம்

தேவை குறையலாம்

அதேசமயம் 4வது முறையாக கணிசமான வட்டி அதிகரிப்பும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். அதோடு இது டாலரின் மதிப்பினையும் ஊக்குவிக்கலாம்.
எனினும் சீனாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் அங்கு பரவலாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது தங்கத்தின் தேவையை குறைக்கலாம்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பல்வேறு நாடுகளின் உற்பத்தி குறித்தான தரவு, மற்றும் சில தரவுகள் வெளியாகவுள்ளது.

குறிப்பாக பிரான்சின் பிஎம்ஐ
ஜெர்மனியின் பிஎம்ஐ
ஜெர்மனியின் வேலையின்மை குறித்தான தரவு
ஐரோப்பாவின் பிஎம்ஐ
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் என பலவும் வரவுள்ளது. இது சந்தையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 6.75 டாலர்கள் அதிகரித்து, 1656.45 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது சற்று அதிகரித்து, 19.675 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியிருந்தாலும், கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் 3வது நாளாக தங்கம் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 214 ரூபாய் அதிகரித்து, 50,722 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் பொருத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை


இந்திய சந்தையில் வெள்ளி விலையும் தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 91 ரூபாய் அதிகரித்து, 58,937 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்றே அதிகரித்தாலும், நீண்டகால நோக்கில் பொருத்திருந்து வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலை இன்று மாற்றம் காணவில்லை. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4730 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 5160 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 41,280 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தஙகம் விலை மாற்றம் இல்லாவிட்டாலும், ஆபரண வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. இது கிராமுக்கு 50 பைசா குறைந்து, 64.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 645 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 64,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,300

மும்பை - ரூ.46,850

டெல்லி - ரூ.47,000

பெங்களூர் - ரூ.46,900

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,300

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+