அடுத்த தீபாவளிக்குள் தங்கம் விலை மீண்டும் வரலாற்று உச்சம் தொடும்.. நிபுணர்கள் செம கணிப்பு..!

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இன்றும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்றம் கண்டுள்ளது.

இதே இந்திய சந்தையினை பொறுத்தவரையில் இன்று விடுமுறையாதலால், மாலை அமர்வு மட்டும் உள்ளது.

தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இது மீடியம் டெர்மில் குறையுமா? அல்லது அதிகரிக்குமா? நீண்ட கால நோக்கில் என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

ஏற்ற இறக்கத்தில் தங்கம்

ஏற்ற இறக்கத்தில் தங்கம்

கடந்த இரண்டு தீபாவளிக்குள் தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் காணமல் உள்ளது. இதற்கிடையில் தற்போது அமெரிக்காவின் பத்திர சந்தையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக டாலரின் மதிப்பும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது அதிக ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.

பொருளாதாரத்தில் வளர்ச்சி நிலை?

பொருளாதாரத்தில் வளர்ச்சி நிலை?

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் பொருளாதாரம் சிறப்பாக ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தினை மாற்றமல் வைத்துள்ளது. இந்த நிலையில் இரண்டாம் பாதியில் பொருளாதாரத்தில் மீண்டும் தாக்கம் ஏற்படலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆக வரவிருக்கும் மாதங்களில் இது தங்கத்தினை மேற்கொண்டு உற்சாகப்படுத்தலாம்.

வட்டி விகிதம் அதிகரித்தால்?

வட்டி விகிதம் அதிகரித்தால்?

தங்கம் விலையானது வட்டி விகிதம் அதிகரித்தால், வட்டியில்லாத முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். எனவே சந்தையில் தற்போதுள்ள நிலையில் இருந்து தங்கம் விலை குறையலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆனால் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் அது பணவீக்கத்தினை மேற்கொண்டு ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு தங்கத்திற்கு தூண்டுதலாக நீண்டகால நோக்கில் அமையலாம்.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலை, குறிப்பாக எவர்கிராண்டே திவால் நிலை, அமெரிக்கா - சீன வர்த்தக நிலை, கொரோனா தாக்கம் என பலவும் சந்தைக்கு எதிராகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஃபெடரல் வங்கி கூட்டம்

அடுத்த ஃபெடரல் வங்கி கூட்டம்

ஃபெடரல் வங்கியின் அடுத்த கூட்டத்தில் பெரியளவிலான பத்திரம் வாங்குதல் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த 2019 மற்றும் 2020ல் முறையே 52% மற்றூம் 25% ஏற்றம் கண்டது. ஆனால் நடப்பு ஆண்டில் இது பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் தற்போது தங்கம் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்


இந்திய சந்தையில் தங்கத்தின் தேவையானது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது தங்கத்தின் விலையினை ஊக்குவிக்க காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையில் வலுவாக காணப்படுகின்றது. இது எதிர்காலத்திலும் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்விலேயே பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்றும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு சற்று அதிகரித்து, 1,796.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 53 ரூபாய் அதிகரித்து, 4,500 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 424 ரூபாய் அதிகரித்து, 36,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 59 ரூபாய் அதிகரித்து, 4,909 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 472 ரூபாய் அதிகரித்து, 39,272 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 10 கிராமுக்கு 49,090 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 90 பைசா அதிகரித்து, 68.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து, 68,600 ரூபாயாகவும் காணப்படுகிறது. தொடர்ச்சியாக 2 வது நாளாக இன்றும் வெள்ளியின் விலையானது ஏற்றம் கண்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இது வரவிருக்கும் டேட்டாக்களினை பொறுத்து இருக்கலாம் என்பதால் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது, தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+