தங்கம் விலையானது கடந்த வாரத்தில் எதிர்பார்த்ததைப் போலவே 1800 டாலர்களை தொட்டது. எனினும் வார இறுதியில் யாரும் எதிர்பாராத அளவு மீண்டும் பலத்த சரிவை கண்டது.
இதற்கிடையில் நிபுணர்கள் இது வரும் வாரத்தில் இன்னும் சற்று குறைய வாய்ப்பிருப்பதாக கருதுகின்றனர்.
இது தங்க வர்த்தகர்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நடப்பு வாரத்தில் தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் என்ன? வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் நிபுணர்களின் கணிப்பு என்ன? முக்கிய லெவல்கள் என்னென்ன? இந்த வாரத்தில் நீண்டகால நோக்கில் வாங்கலாமா? எங்கு வாங்கலாம் வாருங்கள் பார்க்கலாம்.
அமெரிக்க பத்திர சந்தை
தங்கம் விலையானது தொடர்ந்து அமெரிக்க பத்திர சந்தையானது, அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது. நடப்பு வாரத் தொடக்கத்தில் சற்றே தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், பின்னர் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது. இந்த நிலையில் அது தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியது.
டாலர் Vs தங்கம்
தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பும், தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இது அமெரிக்க பத்திர சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் சில்லறை விற்பனைக்கு குறித்தான குறியீடும் சந்தைக்கு சாதகமாக வந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது மேற்கொண்டு அதிகரித்துள்ளது. இது மேலும் தங்கத்திற்கு எதிராக வார இறுதியில் அமைந்தது. இது இறக்குமதி விலை விகிதமானது அதிகரித்து இருந்தும், இந்த சில்லறை விற்பனை விகிதமானது வலுவான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேவை அதிகரிக்கும்
வரும் வாரத்தில் இந்திய சந்தையை பொறுத்தவரையில் தங்கத்தின் தேவையானது, விழாகால பருவத்தினையொட்டி அதிகரிக்கும் என்ற நிலையே இருந்து வருகிறது. இது தங்கத்தின் விலைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவினையே கண்டு வருகின்றது. இது மேலும் தங்களுக்கு சாதகமாக அமையலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
அமெரிக்காவில் கொலம்பஸ் டே
கடந்த வாரத்தில் திங்கட்கிழமை அன்று அமெரிக்காவில் கொலம்பஸ் டே என்பதால், பத்திர சந்தைக்கு விடுமுறையாகும். இது சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்திய நிலையில், பத்திர சந்தையானது சற்றே சரிய ஆரம்பித்தது. எனினும், வார இறுதியில் வெளியான சில்லறை வர்த்தகம் குறித்த குறியீடும், நுகர்வோர் விலை குறித்தான குறியீடும் சந்தைக்கு சாதகமாக வந்த நிலையில், டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்றம் காண தொடங்கியது. இந்த நிலையில்தான் வார இறுதியில் தங்கம் விலை மீண்டும் சரிவு கண்டுள்ளது. வாரத் தொடக்கத்தில் 1800 டாலர்களை தொட்டாலும், வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று 1760 டாலர்களுக்கு அருகில் முடிவடைந்தது.
முக்கிய டேட்டா
வரும் வாரத்தில் சீனாவின் மூன்றாவது காலாண்டு ஜிடிபி விகிதமானது வெளியாகவிருக்கும் நிலையில், இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டாவது காலாண்டில் 7.9% வளர்ச்சி கண்ட நிலையில், இந்த விகிதம் வரவிருக்கும் அறிவிப்பில் சற்று மந்த நிலையை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவில் நிலவி வரும் மின் வெட்டு காரணமாக உற்பத்தி விகிதங்கள் சரிவினைக் கண்டுள்ளன. மேலும் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினையே கண்டு வந்தது என்ற கருத்தும் நிலவி வருகின்றது,. இது டாலரின் மதிப்பில் எதிரொலிக்கலாம், இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது வரும் வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, எப்படியிருப்பினும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் மதிப்பு நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
COMEX தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் சற்று அதிகரிப்பது போன்று தோன்றினாலும், வார இறுதியில் சரிவினையே கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1757.40 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்ச விலையாக 1749.90 டாலர்கள் வரையில் சென்றது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 1801.90 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். இதனையடுத்து வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1768.20 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது. இது வரும் வாரத்திலும் சற்று குறையலாம் என்றாலும், நீண்ட கால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
COMEX வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தினை போல வெள்ளியின் விலையும், வாரத் தொடக்கத்தில் ஏற்றத்தினை கண்டாலும், இறுதியில் சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 22.685 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சமாக 22.325 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 23.625 டாலர்கள் வரையில் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 23.352 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலை நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MCX தங்கம் விலை நிலவரம்
இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 46,950 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 46,864 ரூபாயினை தொட்டது. இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 47,783 ரூபாயினை தொட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று முடிவில் 47,213 ரூபாயாக முடிவுற்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,900 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனிமும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.
MCX வெள்ளி விலை நிலவரம்
இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் திங்கட்கிழமையன்று 61,500 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சமாக 61,211 ரூபாயினை தொட்டது. இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 63,825 ரூபாயாகவே தொட்ட நிலையில். வெள்ளிக்கிழமையன்று முடிவில் 63,271 ரூபாயாக முடிவடைந்தது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 14,400 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 4 நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. எனினும் பெரிய மாற்றம் என்பது இல்லை. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,352 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் கிராமுக்கு 4,464 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,712 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,800 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில் இது பெரியளவில் குறையுமா? என்ற சந்தேகத்தினை எழுப்பியுள்ளது.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. மூன்று நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,210 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 48,710 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 67.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 674 ரூபாயாகவும், கிலோவுக்கு 67,400 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 65,800 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 67,400 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,600 ரூபாய் குறைந்துள்ளது.
மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?
பிசிகல் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் வரவிருக்கும் திருமண முகூர்த்தம், விழாக்கள் உள்ளிட்ட பலவும் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரும் வாரத்தில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இதே போல் பேப்பர் தங்கத்தினையும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!



Click it and Unblock the Notifications