கிட்டதட்ட 4-மாத குறைவான விலையில் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன.. இப்போது வாங்கலாமா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்தில் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டு வந்த நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் முதலீடுகள் குறைந்தன. இதனால் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டது.

இந்திய நிபுணர்கள் முதல் சர்வதேச நிபுணர்கள், தனி நபர்கள் வரையில் அப்போது சொன்ன, ஒரே விஷயம் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்பது தான். விலை மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொடும், சிலர் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3000 டாலர்களை தொடலாம், 5000 டாலர்களை தொடலாம் என்றெல்லாம் கணித்திருந்தனர்.

லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. 200 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்..! லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. 200 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்..!

ஆனால் அதன் பிறகு சரியத் தொடங்கிய தங்கம் விலையானது, இடையில் சற்று ஏற்றத்தினைக் கண்டாலும், தற்போது சரிவிலேயே காணப்படுகிறது. இந்த சரிவு இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? ஏற்கனவே தங்கம் விலையானது 4 மாத குறைந்தபட்ச விலையில் காணப்படுவது, முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க நல்ல சான்ஸ் ஆகவும் பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டினை போல் நிலவரம் இல்லை

கடந்த ஆண்டினை போல் நிலவரம் இல்லை

எப்படியிருப்பினும் கடந்த ஆண்டை காட்டிலும் பல காரணிகள் மாற்றம் கண்டுள்ளன. ஆக இப்போது தங்கத்தின் போக்கு எப்படியுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டில் நிபுணர்கள் நீண்டகால நோக்கில் கணிப்பினை கொடுக்கும்போது கொரோனாவின் வரத்து என்பது புதியது. அப்போது தடுப்பு மருந்துகள் இல்லை. தடுப்பூசி இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக மத்திய அரசு கடுமையான நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியிருந்தது. சர்வதேச அளவிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தன.

முதலீட்டாளர்கள் நம்பிக்கை உடைப்பு

முதலீட்டாளர்கள் நம்பிக்கை உடைப்பு

தங்கம் விலையானது தொடர்ந்து நிபுணர்கள் கூறியதை போல கடந்த சில மாதங்களாகவே 1800 டாலர்களுக்கு மேலே இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த முக்கிய சப்போர்ட் லெவலை உடைத்து, அடுத்தடுத்த சப்போர்ட் லெவல்களையும் உடைத்து காட்டியுள்ளது. அதோடு மாத கேண்டில், வார கேண்டில், தினசரி கேண்டில் என அனைத்தும் மீண்டும் சரிவினைக் காணுவதை போலவே காணப்படுகிறது.

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்

இதற்கிடையில் 1700 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இதனால் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. அதெல்லாம் சரி இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இன்று வாங்கலாமா? வேண்டாமா? இன்னும் குறையுமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமான காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் தங்கம் விலையானது, இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 1.75 டாலர்கள் அதிகரித்து, 1733.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கத்தின் விலை ஏற்றத்தில் காணப்படும் அதே நேரத்தில், வெள்ளி விலை சற்று சரிவில் காணப்படுகிறது. கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.14% குறைந்து, 23.358 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 58 ரூபாய் அதிகரித்து, 46,025 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்சம் மற்றும் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமில்லை. தற்போது கிலோவுக்கு 51 ரூபாய் குறைந்து, 62,585 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 1 ரூபாய் குறைந்து, 4,372 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 34,976 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 கீழாகவே காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 1 ரூபாய் குறைந்து, 4,769 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 38,152 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 30 பைசா குறைந்து, 67.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 67,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் வெள்ளி விலையானது, இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

ஆசியாவின் பல நாடுகளில் உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அமெரிக்காவின் செனட் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு தொகைக்கான ஒப்புதலுக்கு பிறகு, டாலரின் மதிப்பானது, 4 மாத உச்சத்தினை தொட்டுள்ளது. ஆக இது மீடியம் டெர்மில் சற்றும் தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம்.

முக்கிய சப்போர்ட் லெவல்

முக்கிய சப்போர்ட் லெவல்

தங்கத்தின் சப்போர்ட் லெவல் - ரூ.45,712, 45,462, 45,012

ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.46,162, 46,362,46,812

வெள்ளியின் சப்போர்ட் லெவல் - ரூ.62,133, 61,631, 60,576
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.63,188, 63,741, 64,796

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தங்கத்தி எதிராகவே பல காரணிகளும் உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on today, 11th august 2021; check recent MCX and Comex prices

Gold price latest update.. Gold price on today, 11th august 2021, gold prices nearly trade in Rs.46,000, silver around at Rs.62,600
Story first published: Wednesday, August 11, 2021, 12:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X