கொரோனா காலத்தில் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டு வந்த நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது எதிரபாராத அளவு ஏற்றத்தினைக் கண்டது.
குறிப்பாக கடந்த 7 அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. ஆகஸ்ட் மாதத்தின் முற்பாதியில் தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையில் நிபுணர்கள் தங்கம் விலை தொடர்ந்து நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என கூறி வருகின்றனர்.
நல்ல வாய்ப்பினை இழந்து விட்டோமோ?
நிபுணர்கள் கூறுவது எல்லாம் நடந்து விடுமோ? நல்ல வாய்ப்பினை இழந்துவிட்டோமோ? ஏனெனில் ஆகஸ்ட் 9 அன்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1677.90 டாலர்களை தொட்டது. எனினும் அதற்கு பிறகு தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகின்றது.
சரியான சான்ஸ்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்கம் விலையானது 4 மாத குறைந்தபட்ச விலையில் காணப்பட்டது. இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க நல்ல சான்ஸ் ஆக பார்க்கப்பப்பட்டாலும், இதிலிருந்து இன்னும் குறைந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் சந்தையில் நிலவி வந்தது. இதனால் பலரும் இந்த இடத்தில் வாங்காமல் மிஸ் செய்துவிட்டனர் எனலாம்.
கொரோனா பற்றிய அச்சம்
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் எழுப்பியுள்ளது. இதனால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
முதலீட்டாளர்கள் நம்பிக்கை
சில வாரங்களாகவே தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு கீழேயே இருந்து வருகின்றது. எனினும் தற்போது அந்த முக்கிய லெவலை உடைக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இது டெக்னிக்கலாகவும் வார கேண்டில் பேட்டர்னிலும் டோஜி பார்ம் ஆகி அதனை உடைத்துக் காட்டியுள்ளது. இதனால் தங்கம் விலையானது இனி வரும் நாட்களில் இன்னும் சற்று அதிகரிக்கலாம்.
சர்வதேச தங்கம் விலை
சர்வதேச சந்தையில் இரண்டு வாரமாக இன்றும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 5.65 டாலர்கள் அதிகரித்து, 1793.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.
சர்வதேச வெள்ளி விலை
தங்கத்தின் விலை ஏற்றத்தில் காணப்படும் அதே நேரத்தில், வெள்ளி விலை சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.43% அதிகரித்து, 23.762 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டேர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 114 ரூபாய் அதிகரித்து, 47,394 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்சம் மற்றும் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால போக்கில் வாங்கலாம்.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமில்லை. தற்போது கிலோவுக்கு 194 ரூபாய் அதிகரித்து, 63,420 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து, 4,470 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து, 35,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மீண்டும் தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 14 ரூபாய் அதிகரித்து, 4,877 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து, 39,016 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 00 பைசா குறைந்து, 68.40 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 68,400 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் வெள்ளி விலையானது, இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது.
விலை அதிகரிக்கலாம்
ஆசியாவின் பல நாடுகளில் உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அமெரிக்காவின் செனட் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு தொகைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது தங்கத்தின் அதிக ஏற்றத்தினை தடுக்கலாம்.
முக்கிய சப்போர்ட் லெவல்
தங்கத்தின் சப்போர்ட் லெவல் - ரூ.47,125, 46,971, 46,605
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.47,491, 47,703, 48069
வெள்ளியின் சப்போர்ட் லெவல் - ரூ.62,866, 62,506, 61,646
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.63,726, 64,226, 65,086
இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டேர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications