தடுமாறும் தங்கம்.. உச்சத்தில் இருந்து எவ்வளவு குறைந்திருக்கு.. இன்று வாங்கலாமா.. இது சரியான நேரமா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. எனினும் இது பெரியளவில் ஏற்றம் காணவில்லை.

அதோடு கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டு வந்த நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது எதிரபாராத அளவு ஏற்றத்தினைக் கண்டது.

எனினும் அந்த உச்சத்தோடு ஒப்பிடும்போது தங்கம் விலையானது 10 கிராமுக்கு 9000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை மூன்றாவது நாளாக சரிவு... ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிவு.. இனியும் குறையுமா..! தங்கம் விலை மூன்றாவது நாளாக சரிவு... ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிவு.. இனியும் குறையுமா..!

அதிக ஏற்றம் காணவில்லை

அதிக ஏற்றம் காணவில்லை

எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் தங்கத்தினை தற்போது வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். கடந்த மூன்று தினங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. எனினும் கடந்த அமர்வில் பங்கு சந்தைகள் வரலாற்று உச்சத்தினை தொட்ட நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றத்தில் காணப்பட்டது. இதனால் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை.

நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமோ?

நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமோ?

கடந்த ஆகஸ்ட் 9 அன்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1677.90 டாலர்களை தொட்டது. எனினும் அதற்கு பிறகு தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்தது.. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வாய்ப்பு கிடைத்தும் மிஸ் பண்ணிவிட்டோமோ என்ற எண்ணித்தினை உருவாக்கியது. எனினும் இதற்கு பதில் அளிக்கும் விதமாக கடந்த மூன்று அமர்வுகாக சற்று சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

உருமாறிய டெல்டா கொரோனா பற்றிய அச்சம்

உருமாறிய டெல்டா கொரோனா பற்றிய அச்சம்

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் எழுப்பியுள்ளது. இதனால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது தங்கத்தின் விலை சரிவினை தடுத்துள்ளது எனலாம்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

சில வாரங்களாகவே தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு கீழேயே இருந்து வருகின்றது. எனினும் தற்போது அந்த முக்கிய லெவலை உடைக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இது டெக்னிக்கலாகவும் வார கேண்டில் பேட்டர்னிலும் டோஜி பார்ம் ஆகி அதனை உடைத்துக் காட்டியுள்ளது. இதனால் தங்கம் விலையானது இனி வரும் நாட்களில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்ப்படுகிறது. .

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த மூன்று அமர்வுகளாகவே தங்கம் விலையானது சற்று சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 6.35 டாலர்கள் அதிகரித்து, 1789.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது உச்சம் விலை மற்றும் குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

தங்கத்தின் விலை ஏற்றத்தில் காணப்படும் அதே நேரத்தில், வெள்ளி விலையும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.19% அதிகரித்து, 23.273 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 157 ரூபாய் அதிகரித்து, 47,326 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்சம் மற்றும் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமில்லை. தற்போது கிலோவுக்கு 111 ரூபாய் அதிகரித்து, 62,244 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 16 ரூபாய் அதிகரித்து, 4,465 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 35,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 17 ரூபாய் அதிகரித்து, 4,871 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து, 38,968 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 0.40 பைசா குறைந்து, 67 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 67,000 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் வெள்ளி விலையானது, இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

ஆசியாவின் பல நாடுகளில் உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க, ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன.

முக்கிய சப்போர்ட் லெவல்

முக்கிய சப்போர்ட் லெவல்

தங்கத்தின் விலையானது 1792 டாலர்களை உடைத்துக் கொண்டு சென்றால், மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து 1815 டாலர்களை உடைத்தால் மீண்டும் புதிய உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய டேட்டாக்கள்

முக்கிய டேட்டாக்கள்

அமெரிக்காவில் தொடர்ந்து வேலையினை நலன் குறித்த டேட்டாவானது சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அது டாலரின் மதிப்பில் ஏற்றத்தினை காண வழிவகுத்துள்ளது. இது தங்கத்தின் அதிக ஏற்றத்தினை தடுப்பதால் தான் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

ஊக்கம் தரும் பத்திர சந்தை

ஊக்கம் தரும் பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அதனை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க டாலரின் மதிப்பு மேலும் ஏற்றம் கண்டு வருகின்றது. எப்படியிருப்பினும் உருமாற்றம் அடைந்த கொரோனா தாக்கம், அரசியல் பதற்றங்கள் என பலவும் சந்தைக்கு எதிராக உள்ளன.

Array

Array

தங்கத்தின் சப்போர்ட் லெவல் - ரூ.46,878, 46,587, 45,810
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.47,655, 48,141, 48,918

வெள்ளியின் சப்போர்ட் லெவல் - ரூ.61,846, 61,595, 60,841
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.62,618, ,63,103, 63,857

 

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on today, 20th august 2021; gold prices trade higher at Rs.47,242 per 10 gram

Gold price latest update.. Gold price on today, 20th august 2021, gold prices nearly trade in Rs.47,350, silver around at Rs.62,200
Story first published: Friday, August 20, 2021, 12:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X