சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. மிகப்பெரிய ஏற்றத்திற்கு பிறகு சரிவு.. இன்னும் குறையுமா..!

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த ஏற்றத்தினை கண்டது. குறிப்பாக நிபுணர்களின் முக்கிய லெவலான 1800 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. அதனையும் உடைத்து காட்டியுள்ளது. எனினும் தற்போது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது இன்று சரிவில் உள்ளது.

இதற்கிடையில் இன்றைய வர்த்தக அமர்வில் இன்று இன்னும் குறையுமா? இந்த சரிவு தொடருமா? எவ்வளவு குறையும் அல்லது அதிகரிக்கும் என பல கேள்விகள் எழுந்துள்ளது.

எனினும் அதிகரித்து வரும் கொரோனா என்பது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்ற நிலையில், இது அதிக சரிவினைக் தடுக்கலாம். கடந்த ஆண்டே கொரோனா காலத்தில் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டு வந்த நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது எதிர்பாராத அளவு வரலாற்று உச்சத்தினை தொட்டது.

உச்சத்தில் இருந்து சரிவு

உச்சத்தில் இருந்து சரிவு

எனினும் கடந்த ஆண்டு வரலாற்று உச்சமான 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது தங்கம் விலையானது 10 கிராமுக்கு 8,700 ரூபாய் சரிவில் தான் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னிலும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

வட்டி அதிகரிப்பு தாமதமாகலாம்

வட்டி அதிகரிப்பு தாமதமாகலாம்

அமெரிக்காவில் தற்போது உருமாற்றம் அடைந்து வரும் கொரோனாவின் தாக்கம் என்பது நாளுக்கு நாள், புதிய உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், இது பொருளாதாரத்தில் மீண்டும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் வட்டி அதிகரிப்பு என்பது இப்போதைக்கு இருக்காது எனலாம். அதேபோல ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பும் தாமதமாகலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

தொழில் துறை வளர்ச்சி

தொழில் துறை வளர்ச்சி

அமெரிக்காவின் தொழில் துறை வளர்ச்சி விகிதமானது மூன்றாவது மாதமாக தொடர்ந்து குறைந்துள்ளது. இது சந்தையில் வளர்ச்சி விகிதம் சரிய ஆரம்பித்துள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது. இது சப்ளை பற்றாக்குறை, டெல்டா பரவல் உள்ளிட்ட பல காரணங்களுக்கு மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது.

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் கவனம்

வரவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்தில் ஜெரோம் பவலின் கருத்தினை தங்க வர்த்தகர்கள் கவனித்து கொண்டுள்ளனர்.

அதோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4.1 டிரில்லியன் டாலர் குறித்தான, பொருளாதார நிகழ்ச்சியினையும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கான முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படியுள்ளது?

டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படியுள்ளது?

தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், இது டெக்னிக்கலாக பார்க்கும்போது 4 மணி நேர கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக விலை குறையும்போது வாங்கினால், நீண்டகால நோக்கில் இன்னும் லாபம் அதிகமாக கிடைக்கும்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு கீழேயே இருந்து வந்த நிலையில், தற்போது அதனை உடைத்து காட்டியுள்ளது. இது டெக்னிக்கலாகவும் வார கேண்டில் பேட்டர்னிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. இதனால் தங்கம் விலையானது இனி வரும் நாட்களில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்ப்படுகிறது. .

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த அமர்வில் தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸுக்கு சற்று குறைந்து 1806.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. இது நேற்றைய உச்சம் விலையையும் உடைக்கலாம் என்பது போலவே காணப்படுகிறது. ஆக 1809.10 டாலர்களை உடைத்தால் இது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் பொறுத்திருந்து வாங்கலாம்.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் சற்று சரிவில் காணப்படுகிறது. கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து இறக்கத்தினை கண்டு வந்த நிலையில் கடந்த அமர்வில் பலமான ஏற்றத்தினைக் கண்டது. எனினும் இன்று மீண்டும் சற்று சரிவினைக் கண்டிருப்பது புராபிட் புக்கிங் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.20% குறைந்து, 23.608 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 49 ரூபாய் குறைந்து, 47,535 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்சம் மற்றும் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமில்லை. தற்போது கிலோவுக்கு 76 ரூபாய் குறைந்து, 62,839 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 24 ரூபாய் அதிகரித்து, 4,485 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து, 35,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 27 ரூபாய் அதிகரித்து, 4,893 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து, 39,144 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 67.70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 67,700 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் வெள்ளி விலையானது, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

ஆசியாவின் பல நாடுகளில் உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களை உடைத்துள்ள நிலையில், 1815 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Array

Array

தங்கத்தின் சப்போர்ட் லெவல் - ரூ.47,280, 46,976, 46,500
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.47,756, 47,928,, 48,404

வெள்ளியின் சப்போர்ட் லெவல் - ரூ.62,171, 61,415, 60,197
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.63,389, 63,851, 65,069

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை வாங்கலாம் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+