அடடா தங்க நகை வாங்க இது நல்ல நேரம் போலிருக்கே.. சரிவில் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று சரிவில் காணப்படுகிறது. இது தங்க ஆர்வலர்களுக்கும், நகை பிரியர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.

தொடர்ச்சியாக கடந்த 4 அமர்வுகளாக சந்தை தொடர்ந்து ஏற்றத்தினையே கண்டு வந்தது. இதற்கிடையில் இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 16,650-க்கு அருகில் வர்த்தகம்.. லாபம் தான்..! புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 16,650-க்கு அருகில் வர்த்தகம்.. லாபம் தான்..!

அதோடு கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தோடு ஒப்பிடும்போது தங்கம் விலையானது 10 கிராமுக்கு 8,800 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் வலுவடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இது அமெரிக்காவில் நடக்கவிருக்கும் வருடாந்திர பொருளாதார கூட்டத்தில், ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மற்றும் பலரும் உரையாற்றவுள்ளனர். ஆக இந்த கூட்டத்தில் ஏதும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுமா? பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்காக அறிவிப்புகள் ஏதும் வருமா என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

விலை அதிகம்

விலை அதிகம்

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், டாலரில் தங்கத்தினை வாங்கும் மற்ற நாணயதாரர்களுக்கு அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், இது தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. இதற்கிடையில் டாலரின் மதிப்பானது 0.16% அதிகரித்து, 93.052 டாலராக காணப்படுகின்றது. ஆக இதுவும் தங்கம் விலை சரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தங்கத்திற்கு சாதகமான டேட்டா
 

தங்கத்திற்கு சாதகமான டேட்டா

அமெரிக்காவின் வீடு விற்பனை குறித்தான டேட்டா சாதகமாக வந்துள்ள நிலையில், இது சந்தையில் அதிக ஏற்றத்தினை தடுத்த நிலையில், இன்று சரிவினைக் காண வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் இன்று சரிவினைக் கண்டுள்ளது. எனினும் அமெரிக்காவில் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் எழுப்பியுள்ளது. இதனால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியம் டெர்மில் என்ன செய்யலாம்?

மீடியம் டெர்மில் என்ன செய்யலாம்?

தங்கத்தின் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் டோஜி பார்ம் ஆகியுள்ள நிலையில், டோஜியின் குறைந்தபட்ச விலையான 1802.60 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. டோஜியின் உச்சம் 1812.20 டாலர்களாகும். ஆக இதனை உடைத்தால் மட்டுமே சற்று ஏற்றத்திற்கு திரும்பலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக சந்தை சற்று சரிவினைக் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த நான்கு அமர்வுகளாகவே தங்கம் விலையானது சற்று ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 11.35 டாலர்கள் குறைந்து, 1797.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

தங்கத்தின் விலை சரிவில் காணப்படும் அதே நேரத்தில், வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றத்தினைக் கண்டு வரும் நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.59% குறைந்து, 23.753 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 193 ரூபாய் குறைந்து, 47,418 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் விலை குறைந்துள்ளது. தற்போது கிலோவுக்கு 258 ரூபாய் குறைந்து, 63,201 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 16 ரூபாய் குறைந்து, 4,469 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து, 35,752 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 18 ரூபாய் குறைந்து, 4,875 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 39,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 0.20 பைசா அதிகரித்து, 67 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 67,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் வெள்ளி விலையானது, 4வது நாளாக இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.

நீண்டகால நோக்கில் எப்படியுள்ளது?

நீண்டகால நோக்கில் எப்படியுள்ளது?

ஆசியாவின் பல நாடுகளில் உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சரி என்று சொல்லும் விதமாக தங்கம் விலையானது கடந்த அமர்வில் 1800 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது.

Array

Array

தங்கத்தின் சப்போர்ட் லெவல் - ரூ.47,479, 47,346, 47,087

ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.47,738, 47,864, 48,123

வெள்ளியின் சப்போர்ட் லெவல் - ரூ.62,910, 62,346, 61,392
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.63,864, 64,254, 65,208

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன. எனினும் செல்லிங் ஆப்சனில் லாபம் பார்க்க வாய்ப்பு உண்டு. எனினும் கண்டிப்பாக ஸ்டாப் லாஸ் என்பதை போட்டு வர்த்தகம் செய்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on today, 25th august 2021; gold prices fall sharply after rising 2 days in MCX

Gold price latest update.. Gold price on today, 25th august 2021, gold prices trade at Rs.47,431, silver around at Rs.63,200
Story first published: Wednesday, August 25, 2021, 11:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X