ரூ.8,900க்கு மேல் சரிவில் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

தங்கம் விலையானது கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளன்று பலத்த ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த சரிவு இப்படியே தொடருமா? அப்படி தொடர்ந்தால் இன்னும் எவ்வளவு குறையும். தற்போது விலை நிலவரம் என்ன?

தங்கத்திற்கு சாதக பாதகமான முக்கிய காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

உச்சத்தில் இருந்து ரூ.8,900 வீழ்ச்சி

உச்சத்தில் இருந்து ரூ.8,900 வீழ்ச்சி

கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் தங்கம் விலையானது, இன்று சரிவினைக் கண்டு வருகின்றது. அதோடு கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டு வந்த நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது எதிரபாராத அளவு 56,200 ரூபாய் என்ற அளவில் ஏற்றத்தினைக் கண்டது. அந்த உச்சத்தோடு ஒப்பிடும்போது 8,900 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது. தற்போது விலையானது 47,300 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜாக்சான் ஹோல் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய, அமெரிக்க மத்திய வங்கியின் ஜெரோம் பவல் பத்திரம் வாங்குதலை இந்த ஆண்டில் மெதுவாக குறைக்கப்படும் என்று கூறியிருந்தார். அதோடு வட்டி விகிதமும் நடப்பு ஆண்டில் அதிகரிக்கப்படாது என்ற நிலையே இருந்து வருகின்றது.

குறைந்த வட்டி விகிதம்

குறைந்த வட்டி விகிதம்

எனினும் குறைந்த வட்டி விகிதமானது டாலரின் மதிப்பினை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருக்கலாம். இதனால் பத்திர சந்தையிலும் முதலீடுகள் குறையலாம் என்ற கருத்தே நிலவி வருகின்றது. அதோடு டாலரின் மதிப்பு சரிவினைக் கண்டால், இது தங்கம் விலையினை மற்ற நாணயதாரர்களுக்கு, டாலரில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு விலை அதிகமுள்ளதாக மாற்றலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் அழுத்தம் இருக்கலாம். இதனால் தற்போது தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது.

பணவீக்கம் அதிகரிக்கலாம்

பணவீக்கம் அதிகரிக்கலாம்

ஜெரோம் பவல் பேசிய போது, பணவீக்கம் பற்றிய அச்சத்தினையும் சுட்டிக் காட்டியிருந்தார். இது தங்கத்திற்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாகவே அமைந்துள்ளது.

அதிகரிக்கும் உருமாறிய கொரோனா

அதிகரிக்கும் உருமாறிய கொரோனா

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் உருமாறிய கொரோனாவினை கருத்தில் கொண்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அமெரிக்கா ஊக்கத் தொகை குறித்த அறிவிப்பு இன்னும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதுவும் இன்னும் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்பாக அமையும்.

சரிவில் தொழிற்துறை

சரிவில் தொழிற்துறை

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தொழிற்துறை குறித்த குறியீடுகள், ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. இது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவலால் இது இன்னும் சரியலாமோ என்றம் அச்சத்தினையே ஏற்படுத்தியுள்ளது. ஆக இதுவும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக ஏற்றம் காணவில்லை

அதிக ஏற்றம் காணவில்லை

எப்படியிருப்பினும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு மேலேயே இருந்து வருகின்றது. இதனால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற உணர்வினையே ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 2.15 டாலர்கள் குறைந்து, 1817.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வின் உச்சம் விலையை உடைத்து காட்டியுள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

தங்கத்தின் விலை ஏற்றத்தில் காணப்படும் அதே நேரத்தில், வெள்ளி விலையும் சற்று சரிவில் காணப்படுகிறது. கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.21% குறைந்து, 24.060 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 249 ரூபாய் குறைந்து, 47,289 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்சம் மற்றும் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இந்திய சந்தையிலும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது கிலோவுக்கு (டிசம்பர் காண்ட்ராக்ட்) 368 ரூபாய் குறைந்து, 63,698 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 20 ரூபாய் குறைந்து, 4,488 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 35,904 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 22 ரூபாய் குறைந்து, 4,896 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 39,168 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 0.30 பைசா குறைந்து, 68.40 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 68,400 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் வெள்ளி விலையானது, இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. அதோடு நிபுணர்களும் நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது அதிகரித்தாலும் அது பெரியளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இது குறித்து https://tamil.goodreturns.in/news/gold-price-weekly-update-gold-price-may-fall-soon-as-us-federal-announces-tapering-timeline-024784.html என்ற கட்டுரையில் விரிவாக பார்த்தோம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+