தங்கம் விலையானது 2022 என்பது பெரியளவில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவில்லை. பல்வேறு சவாலாக காரணிகளுக்கு மத்தியிலும் சரிவிலேயே காணப்பட்டது. எப்படியிருப்பினும் வருட தொடக்கத்தில் சரிவில் காணப்பட்டாலும், வருட இறுதியில் ஏற்றத்தில் தான் காணப்பட்டது.
இது நடப்பு ஆண்டிலும் இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சரிவிலேயே முடிவு
தங்கத்தின் ஸ்பாட் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு அருகில் காணப்படுகின்றது. இதில் 2022 நடுப்பகுதியில் 1615 டாலர் என்ற லெவலை எட்டியது. இதே 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் 2000 டாலர்களையும் உடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில் தொடர்ச்சியாக சரிவிலேயே முடிவடைந்தது.
டபுள் பாட்டம்
டாலரின் மதிப்பானது உச்சத்தில் காணப்படும் நிலையில், இது 114 என்ற லெவலில் காணப்படுகின்றது. மாத சார்ட் அடிப்படையில் தங்கத்தில் டபுள் பாட்டம் பார்ம் ஆகியுள்ள நிலையில், டிசம்பர் 2022ல் இந்திய சந்தையில் 55,000 ரூபாய் என்ற லெவலை எட்டியுள்ளது. இது 56,161 ரூபாய் என்ற லெவலையும் ஆல் டைம் உச்சமாக எட்டியுள்ளது. 2023ல் அதனை உடைப்பதற்கு பெரும் தடையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விலை அதிகரிப்பது நிச்சயம் இருக்கலாம்.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
இதே வார கேண்டில் பேட்டர்னில் ஏசண்டிங் டிரையாங்கிள் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதன் சப்போர்ட் லெவல் 49,000 என்ற லெவலுக்கு அருகிலும் காணப்படுகின்றது. அதேபோல 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் முவிங் ஆவரேஜ்ஜீக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதற்கிடையில் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 55550 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். மொத்தத்தில் 2023ல் தங்கம் விலையானது ஏற்றம் காண வாய்ப்புகள் அதிகம் என்றே கூறலாம்.
டெக்னிக்கலாக எப்படி?
தங்கம் விலையானது ஆர் எஸ் ஐ உள்ளிட்ட முக்கிய டெக்னிக்கல் இண்டிகேட்டர்களும் வார, மாத கேண்டில்களில் ஏற்றம் காணலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. ஆக தங்கம் விலை குறையும்போதெல்லாம் வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலையானது 58,888 ரூபாயாகவும், அதனை அடுத்து 61,111 ரூபாயினையும் எட்டலாம்.
ஆபரணத் தங்கம் விலை எப்படியிருக்கும்?
தொடர்ந்து சர்வதேச சந்தையிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இனியும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலி இந்திய சந்தையிலும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
இன்று எப்படியிருக்கு?
ஆபரணத் தங்கம் விலையானது இன்று மாற்றம் காணாமல் கிராமுக்கு 5130 ரூபாயாகவும், சவரனுக்கு 41,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே வெள்ளி விலையும் கிராமுக்கு 74.30 ரூபாயாகவும், கிலோவுக்கு 74,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மற்றொரு கணிப்பு
இதே கோடக் செக்யூரிட்டீஸ் மற்றொரு அறிக்கையில் தங்கம் விலையானது டாலரில் 1670 - 2000 டாலர்களுக்குள்ளும், இதே இந்திய சந்திதையில் 48,500 - 60,000 ரூபாய்க்குள்ளும் இருக்கலாம் என கணித்துள்ளது. வரும் மாதங்களில் தங்க ஆபரணம், காயின், பார் மற்றும் முதலீட்டு ரீதியாகவும் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?



Click it and Unblock the Notifications