தங்கம் விலையானது கடந்த 4 வாரங்களாகவே சரிவில் இருந்து வந்த நிலையில், இந்த வார இறுதியில் ஏற்றத்தில் முடிவடைந்தது. இது மேற்கொண்டு வரும் வாரத்தில் எப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருட உச்ச விலையில் இருந்து சரிவினைக் கண்டுள்ளது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தொடர்ந்து சர்வதேச பங்கு சந்தைகளானது சரிவினைக் கண்டு வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் முக்கிய பங்கு
இதற்கிடையில் மீடியம் டெர்மில் தங்கம் விலை குறித்து ரிலீகேர் புரோக்கிங் நிறுவனத்தின் ஆய்வாளர், விபுல் ஸ்ரீவஸ்தவா, டாலரின் மதிப்பு தங்கம் விலையில் முக்கிய பங்கு வகிக்கலாம். இது வரும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும். இது வரும் வாரத்தில் 105 - 103 என்ற லெவலில் இருக்கலாம். இது மேற்கொண்டு டாலரில் அழுத்தம் இருந்தால், அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ஜிடிபி தரவு எதிர்பார்ப்பு
ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அமெரிக்காவின் ஜிடிபி குறித்தான தரவும் முக்கிய காரணியாக உள்ளது. இது மே 26, 2022 அன்று வெளியாகவுள்ளது. ஆக ஜிடிபி வளர்ச்சி விகிதமானது எதிர்பார்ப்பினை விட குறைவாக இருந்தால், அது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். ஆக இதுவும் தங்கம் விலையில் முக்கிய காரணியாக இருக்கலாம்.

ஃபெடரல் வங்கி கூட்டம்
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது வரும் வாரத்தில் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் மீண்டும் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு குறித்தான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

ரூபாய் Vs டாலர்
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது நடப்பு வாரத்தில் அதன் ஆல் டைம் லோவினை எட்டியுள்ளது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். வரவிருக்கும் வாரத்தில் இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம். இது உள்நாட்டு தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.

எனர்ஜி விலை
தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலையானது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது மீண்டும் பணவீக்கம் உச்சம் தொடர் வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையில் எதிரொலிக்கலாம். தற்போது சீனாவில் லாக்டவுன் நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளது. இது மேலும் தேவையினை ஊக்குவிக்கலாம்.